கல்கியின் முதல் நாவல் எது

கல்கியின் முதல் நாவல் எதுகள்வனின் காதலி

புகழ் பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவரே கல்கி ஆவார். இவர் பல்வேறுபட்ட நாவல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இவரின் முதல் நாவல் கள்வனின் காதலி எனப்படும் நாவலாகும்.

கள்வனின் காதலி

அமரர் கல்கி எழுதிய முதல் நாவல் “கள்வனின் காதலி” நாவலாகும். ஆனந்த விகடனில் கல்கி பொறுப்பாசிரியராக காணப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த நாவலை எழுதினார். இந்த நாவலானது பல உள்ளடக்கங்களை கொண்டமைந்து காணப்படுகின்றது.

கள்வனின் காதலி நாவலானது மிகவும் சிறப்பு மிக்க ஒரு நாவலாகவே காணப்படுகின்றது. அதாவது அவசரப்படுவதால் ஏற்படும் இழப்பு பற்றி குறிப்பிடுகின்ற ஒரு கதையாகும். இக்கதையானது ஆரம்ப காலத்தில் இடம் பெறும் கதையை அடிப்படையாக கொண்டதாகும்.

கல்கி எழுத்தாளரின் சிறப்புக்கள்

கல்கி எழுதிய “அலை ஓசை” என்ற நாவலின் மூலமாக இவர் சாகித்திய அகாதமி விருதினை பெற்றார். ஆனந்த விகடனை பொது வாசிப்பிற்குரிய ஒரு நூலாக ஆக்கியவர் இவரே ஆகும்.

கல்கி சிறந்த எழுத்தாளராகவே திகழ்ந்தார். அதாவது அவருடைய எழுத்தில் ஒரு காந்த சக்தி இருக்கின்றது என அவரை ராஜாஜி என்பவர் பாராட்டினார். மேலும் சங்கீத கலாசிகாமணி விருதினையும் பெற்றார்.

கல்கியின் எழுத்துக்களானவை தமிழிசை இயக்கத்தை நிலை நாட்டியவை என கூறப்படுகின்றது. இதனூடாக கல்கியின் பெருமை எடுத்துக்காட்டுகின்றது.

கள்வனின் காதலி நாவலின் சிறு விளக்கம்

முத்தையன் தனது தங்கை அபிராமியுடன் வசித்து வருபவன் ஆவான். கல்யாணி என்பவளை காதலிக்கிறான். ஆனால் அப்பாவின் வற்புறுத்தலால் வயதான நபருடன் கல்யாணிக்கு திருமணம் இடம் பெற்றது.

இந்த நிலையில் தன் தங்கையுடன் தவறாக நடக்க முயல்பவனை துடைத்து எடுத்ததில் அடிவாங்கியவர் கொடுத்த பொய் புகாரில் சிறை செல்கின்றான்.

தன்னுடைய தங்கை என்ன செய்வாள் என்ற கவலையில் சிறையில் உள்ள திருடன் ஒருவனது உதவியுடன் அங்கிருந்து தப்பித்தான் முத்தையன். இதன் பின்னர் பழைய நிலைக்கு செல்ல முடியாமல் திருடனாகவே தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இறுதியில் அபிராமி மற்றும் கல்யாணிக்கு என்ன ஆனது என்பதனை கூறுவதாகவே கள்வனின் காதலி எனும் நாவல் அமைந்து காணப்பட்டது. அதாவது அவசரப்படுவதால் ஏற்படும் இழப்பை சுட்டிக் காட்டக் கூடியதாகவே இந்த நாவல் அமைந்துள்ளது.

கள்வனின் காதலி நாவலின் பண்புகள்

இந்த நாவலானது தனக்கென ஒரு பெரிய கதைக் களத்தை கொண்டது. தனிமனிதனுடைய சிக்கல்கள் மற்றும் சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளை சித்தரித்து காட்டக் கூடிதாக கள்வனின் காதலி நாவலானது காணப்படுகின்றது.

நாவல் சமூகத்தை மையப்படுத்தியதாகும். எமக்கு சிறந்ததொரு வழிகாட்டலை காட்டக் கூடியதாகும். சமூகத்தில் இடம் பெறும் நிகழ்வுகளை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஒருவருடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பானது எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றியும் அவர் எதிர்நோக்குகின்ற சவால்கள் பற்றியும் சிறந்த ஓசை நயங்களினூடாக விளக்கப்படுகிறது.

கள்வனின் காதலி என்ற நாவலானது வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்பது பற்றியும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

எனவேதான் இன்றைய காலப் பகுதிகளில் பல பொழுதுபோக்கு சாதனங்களுக்கு கொடுக்கின்ற அளவு முக்கியத்துவத்தை நாவல்களுக்கு எவரும் வழங்குவதில்லை. பொழுதுபோக்கு நேரங்களை பயனுள்ள விதத்தில் கழிப்பதற்கு அனைவரும் முயற்சி செய்தல் வேண்டும்.

Read More: ஊக்கமுடைமை என்றால் என்ன

அழகியல் கல்வியின் முக்கியத்துவம்