கருணை என்ற சொல்லுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் அது பயன்படுத்தப்படும் சூழலைப் பொறுத்தது. பொதுவாக அனைத்து உயிர்கள் மீதும் எதிர்பார்ப்பில்லாத அன்பே கருணை எனக் கூறலாம். இது இரக்கத்தின் செயலாக பார்க்கப்படுகின்றது.
கருணை என்பது ஒரு ஆளுமைப் பண்பாக மற்ற உயிரினங்களுடன் எதையாவது பகிர்ந்து கொள்ளும் திறன், நன்றியுணர்வு போன்றவற்றால் அறியப்படுகின்றது.
கருணை என்பது நமக்குள் இருக்கும் ஒரு உணர்வு மட்டுமல்லாது நல்ல செயல்களைச் செய்ய வல்ல சக்தியெனலாம். மேலும் துக்கமான நேரத்தைக் கடந்து செல்லும் ஒரு நபருக்கு ஒருவர் காட்டும் ஒரு கனிவான அணுகுமுறை எனலாம்.
கருணை வேறு பெயர்கள்
- அருள்
- இரக்கம்
- கிருபை
- தயவு
- அன்பு
- ஈவு
You May Also Like: |
---|
மாட்டு இறைச்சி பயன்கள் |
இயற்கையாக முடி கருமையாக |