சிறந்த கட்டுரை எழுதுவது எப்படி என்ற கேள்வி உள்ளவர்களுக்கு இந்த பதிவு விடையாக அமையும்.
நம் கருத்துக்களை பேச்சு அல்லது எழுத்துக்கள் மூலமாகவே பெரும்பாலும் வெளிப்படுத்துவம். எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தும் போது குறுஞ்செய்தி, கதை மற்றும் கட்டுரைகளாக வெளிப்படுத்துகிறோம்.
கட்டுரைகளில் பல வகைகள் உண்டு.
- விளக்க கட்டுரை
- விவாகக்கட்டுரை
- பயணக்கட்டுரை
- அனுபவ கட்டுரை
இவ்வாறு பல கட்டுரை வகைகள் இருந்தாலும் பொதுவாக கட்டுரை எழுதுவது எப்படி என்று பார்க்கலாம்.
Table of Contents
சிறந்த கட்டுரை எழுதுவது எப்படி
அமைப்பு
- தொடக்கவுரை (முன்னுரை)
- மையக்கருத்து (பொருள் உரை)
- முடிவுரை
கட்டுரை என்றாலே தொடக்கவுரை, மையக்கருத்து மற்றும் முடிவுரை என்ற இந்த அமைப்பு இருக்கும். இவற்றை விவரித்து எப்படி கட்டுரை எழுதுவது என்று பார்க்கலாம்.
தொடக்கவுரை அல்லது முன்னுரை
தொடக்கவுரை அதாவது முன்னுரையை வாசகர்கள் படிக்கும் போதே நாம் சொல்லவரும் தகவல் அல்லது செய்தி தெளிவாக விளங்க வேண்டும்.
முன்னுரை சிறிய அளவாக இருக்க வேண்டும். கட்டுரையின் பத்தின் ஒரு பங்காக இருப்பது சிறப்பாக இருக்கும்.
மையக்கருத்து (பொருள் உரை)
முதல் வரியிலேயே மையக்கருத்தை நேரடியாக வெளிப்படுத்துவது சிறப்பு. அதாவது கட்டுரை எதைப் பற்றியது என்பது ஆரம்பத்திலேயே சொல்ல தெரிய வேண்டும்.
கட்டுரையின் பொருளை விளக்கும் போது பத்தி பிரித்து எழுத வேண்டும்.
ஒரு பத்தி (பந்தி) எழுதும் போது அதன் கருது முழுமையாக இருக்க வேண்டும். ஒரு பத்தி (பந்தி) முழுமையாக நிறைவடைந்த பின் அடுத்த பத்தியில் (பந்தியில்) வேறு கருத்துக்களை எழுத தொடங்க வேண்டும்.
பத்தி (பந்தி) பிரிக்கும் போது கருத்தின் அடிப்படையிலே பத்தி பிரிய வேண்டும்.
மையக்கருத்தை வெளிப்படுத்தும் இடத்தில் அதற்கான ஆதாரங்கள், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அனுபவங்கள் போன்றவற்றை இணைத்து எழுதுதல் நன்றாக இருக்கும்.
தொடர் அமைப்பு
எளிய சொற்களில் சிறு சிறு தொடர்களாக எழுதுவது நம் கருத்தை அல்லது எண்ணங்களை தெளிவாகவிளக்கும்.
சொல்லவரும் கருத்தை நேரடியாக உரை நடை வடிவத்தில் சொல்ல வேண்டும். கலவை தொடர்கள் சொல்லவரும் கருத்தை தவறான கோணத்தில் கொண்டுசெல்லவும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
முடிவுரை
முடிவுரை என்பது நாம் கூறிய மையக்கருத்தை தெளிவாக வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அத்துடன் சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்து கூறுவதாக அமைய வேண்டும்.
கட்டுரை முடிவுரை மிக நீளமாக எழுதுதல் கூடாது. நான்கு அல்லது ஐந்து வரிகளுக்குள் எழுதுதலே சிறந்த முடிவுரையாக இருக்கும்.
நினைவில் கொள்ளவேண்டியவை
கட்டுரை எழுவதற்கு முன் கட்டுரை தலைப்பினை நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
தெளிவான மொழிநடையில் அனைவருக்கும் விளக்க கூடியதாக எழுத வேண்டும்.
எழுத்து பிழைகள் இல்லாமல் கட்டுரை எழுதவேண்டும்.
சரியான குறியீடுகள் குறிப்பாக நிறுத்தல் குறியீடுகள், மேற்கோள் குறிகள் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துதல் வேண்டும்.
கட்டுரை தலைப்பை நோக்கி என்..? எப்படி..? எதற்கு..? யார்..? என சில கேள்விகளை கேளுங்கள் அதற்கு விடையாக வருவதை கொண்டு சிறந்த கட்டுரையினை எழுத முடியும்.
படிப்பவர்களை உங்கள் கட்டுரை ஈர்க்குமாறு இருக்க வேண்டும். வாசகர்கள் ஆர்வமாக வாசிக்கும் படி எழுத வேண்டும்.
கட்டுரை என்பது எடுத்தல், தொடுதல், முடித்தல் என்ற வகையில் இருக்க வேண்டும்.
வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள்