இறைவனின் விந்தைப் படைப்புகளுள் ஒன்றான மனித இனத்தின் மனமாகிய அகவுலகம் முழுமையாக ஆராய்ச்சி செய்யவோ, வெளிப்படுத்தவோ இயலாதது.
அது தன்முன் விரிந்துள்ள உலக வாழ்க்கையிலிருந்து எண்ணற்ற பொருட்களையும், செய்திகளையும் திரட்டி, சிந்தனை ஆற்றலினால் உருப்படுத்தி, வெளியிட முயல்கிறது. இத்தகைய முயற்சிகளின் வெளிப்பாடுகளாகவே கலைகள் அமைந்திருக்கின்றன.
இவ்வெளிப்பாடுகளின் எல்லை இன்பமாக ஆடலும், பாடலும் சுவைபட இணைவதில் உருவாகும் நாடகக்கலை, ஏனைய கலைகளை விடச் சிறந்து விளங்குகின்றது. மனித வாழ்க்கையில் கலைகள் இரண்டு விதங்களில் பயன்படுகின்றன.
ஒன்று மனத்திற்கு அறிவூட்டுவது மற்றொன்று மனத்தை மகிழச் செய்வது ஆகும். நாடகக்கலையும் இவ்விரு நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே ஆகும்.
நாடகம் என்பது நாட்டின் அகமான மக்களைப் பற்றிப்பேசுவது. மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றிப்பேசுவது. அதனால்தான் இது மக்கள் கலை என்று சொல்லப்படுகிறது.
தமிழ் நாடகம் காலந்தோறும் மாற்றங்களுக்குட்பட்டு வந்திருக்கிறது. இம்மாற்றங்களில் ஒன்றே ஓரங்க நாடகம் ஆகும்.
Table of Contents
ஓரங்க நாடகம் என்றால் என்ன
ஒரு நாடகத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களையும் மேடையில் அல்லது வானொலியில் ஒருவரே செய்வது ஓரங்க நாடகம்.
ஓரங்க நாடகத்தின் இயல்புகள்
புதிய நாடக வடிவமாக உள்ள ஓரங்க நாடகத்தைச் சிறுகதையுடன் ஒப்பிடலாம். சிறுகதைக்கு வரலாறும், இலக்கணமும் இருப்பது போல் இதற்கும் வரலாறும் இலக்கணமும் சொல்லப்பட வேண்டும்.
நாடகம் நீண்டிருந்தால் எல்லோராலும் மனதை ஒருமுகப்படுத்திக் கவனம் செலுத்த இயலாத காரணத்தால் ஓரங்க நாடகம் தோன்றியது.
இதில் ஒரே காட்சி அமையும் கிளைக்கதை இருக்காது. எதிர் இன்ப உணர்ச்சியோ அல்லது துன்ப உணர்ச்சியோ தோன்றும். இன்பம் அல்லது துன்பமாக முடியும். குறுகிய காலத்தில் முடியும்.
சங்ககால இலக்கியமான கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது. பொதுவாக ஓரங்க நாடகங்கள் ஒற்றைக் காட்சியமைப்பில் நடந்து முடிவதாக அமையும். ஓரங்க நாடகம் அழுத்தம் மிக்கதாகச் சிறப்பானதாகப் பார்வையாளரைச் சென்று சேரும்.
நாடகத்தின் தோற்றம்
மனிதன் என்று அறிவுபெற்றுத் தோன்றினானோ அன்றே நாடகமும் ஏதோ ஒரு முறையில் தோற்றம் பெற்றிருக்கக் கூடும்.
மனிதனின் விளையாட்டு உணர்வும், பிறரின் செயல்களை நடித்துக் காட்ட விரும்பும் இயல்பும் நாடகங்கள் தோன்றக் காரணங்களாக அமையலாம். பொதுவாக நாடகத் தோற்றம் பற்றி தெளிவான கருத்தை அறிய முடியாமல் உள்ளது.
நடனத்திலிருந்து தான் நாடகம் தோன்றியிருக்க வேண்டும் என்பர் சிலர், சமயச் சடங்குகளிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கூறுவர். பொதுவாக சடங்கிலிருந்தே நாடகம் தோன்றியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
புரதான மனிதன் பருவகால மாற்றங்களையும், இயற்கையோடு நிகழும் பல மாற்றங்களையும் கண்டு இவை தனக்கு மேலான சக்திகளின் செயற்பாடே என்று நம்பினர். அவற்றினை அடிப்படையாகக் கொண்டே சடங்ககள் உருவாகின. இதுவே நாடகமாக வளர்ந்தது.
உலக நாடகத்தின் தோற்றம் எகிப்திலிருந்து தொடங்குவதாக நாடக ஆய்வாளர்கள் கருதுவார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் நாடகம் தோன்றிவிட்டது.
ஐந்து விதமான எகிப்திய நாடகங்கள் இருந்தன. எகிப்தில் நாடகங்கள் தோற்றம் பெற்றாலும் திட்டவட்டமான தகவல்களுடன் வரலாறு தொடங்குவது கிரேக்க நாடகத்திலிருந்தே எனலாம். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, ஐப்பான் எனப் பல இடங்களிலும் தோற்றம் பெற்றது.
Read more: நாடகம் என்றால் என்ன