ஒற்றன் வேறு பெயர்கள்

ஒற்றன் வேறு சொல்

அன்று முதல் இன்று வரை படைகளில் காணப்படும் ஐந்தாம் படையாக போற்றப்படுபவனே ஒற்றன் ஆவான். ஒற்றன் என்பவன் ஒரு எதிரி அல்லது போட்டியாளரின் செயற்பாடுகளையும் இயல்புகள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்களை இரகசியமாக சேகரித்து அறிக்கை அளிக்கும் நபராவான்.

சுருங்கக்கூறின் ஒற்றன் என்பவன் உழவு வேலையில் ஈடுபடுபவனே ஒற்றன் ஆவான். அரசு ஒன்றை சிறப்பாக நடாத்த வேண்டுமாயின் ஒற்றன் என்பவன் அவசியமாகின்றான்.

இதனையே பல இலக்கியமாக உறுதி செய்கின்றன பொய்யாமொழி புலவரால் இயற்றப்பட்ட திருக்குறளில் ஒற்றனைப் பற்றிய சிறப்புக்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

அவ்வகையில் ஒற்றன் தெரிவிக்கும் விடையங்களை உணராத மன்னன் வெற்றி பெறுவதற்கான வழி இல்லை என ஒற்றன் சிறப்பு பற்றி திருக்குறள் எடுத்தியம்புகின்றது. இதனை

“ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா  மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்”

என்ற குறளின் வாயிலாக அறியலாம். இவ்வாறு ஓர் நாட்டின் ஆட்சியை சிறப்புற செய்யும் ஒற்றனுக்கு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

ஒற்றன் வேறு பெயர்கள்

  1. மந்தரன்
  2. மந்திரகூடன்
  3. வேவுக்காரன்
  4. வேய்கன்
  5. வேவாள்
  6. நோட்டக்காரன்
  7. சாரன்
  8. தூதன்
  9. உளவாளி
  10. உளவுக்காரன்
  11. உளவன்
  12. பாடி

இவ்வாறான பெயர்கள் வழங்கப்படுகின்றன.

ஒற்றனின் முக்கியத்துவம்

  • குடிமக்கள் பற்றி அறிய ஒற்றன் அவசியம்.
  • ஒற்றன் கூறும் விடயங்களை அவதானித்தால் மட்டுமே மன்னன் வெற்றி பெற முடியும்.
  • ஒற்றன் தான் அறிந்த விடயங்களை யாரும் அறியாமல் வைத்திருக்கும் தன்மை கொண்டவன்.
  • எதற்கும் சோர்ந்து போகாமல் மன்னனுக்கு நன்மை செய்யக் கூடியவர்.
  • அரசன் ஒருவன் தன் குடும்பத்தினர், தமது உறவினர், பகைவர் போன்றோர் பற்றி அறிய மன்னனுக்கு ஒற்றன் அவசியமாகின்றான்.     

இவ்வாறான சிறப்புக்களை கொண்டவன் ஒற்றன் ஆவான்.

Read more: இலந்தை பழத்தின் நன்மைகள்

தமிழ்நாட்டின் பெருமைகள் கட்டுரை