எக்மோ சிகிச்சை என்றால் என்ன

உயிர் காக்கும் சிகிச்சையின் வடிவமான “எக்மோ சிகிச்சை என்றால் என்ன” என்பதை விளக்கமாக இந்த பதிவில் பார்ப்போம்.

எக்மோ சிகிச்சை என்றால் என்ன

எக்மோ (ECMO) என்பதன் விரிவு “Extra Corporeal Membrane Oxygenation” என்பதாகும்.

ஒருவரினுடைய நுரையீரல் அல்லது இதயம் முறையாக தொழிற்படாத போது இதன் தொழிற்பாடுகளை வெளியில் இருந்து இயக்கும் கருவியே எக்மோ கருவி ஆகும்.

சுவாச காற்றில் இருந்து ஒட்சிசனை பிரித்து இரத்தத்தில் சேர்க்கும் சுத்திகரிப்பு வேலையை நுரையீரல் செய்கிறது.

அதே போல இரத்தத்தை நரம்பு மண்டலங்கள் ஊடக உடல் முழுவதும் பாய்ச்சும் வேலை இதயத்தினுடையது.

தீவிர மூச்சு திணறல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாத போது நுரையீரலின் சுத்திகரிப்பு வேலையை எக்மோ கருவி செய்யும்.

இதனால் நுரையீரல் முறையாக தொழிற்படாத போதும் உடலிற்கு தேவையான ஓட்சிசன் கிடைத்து விடும். இதன் விளைவாக சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் தடைபெறாமல் நடக்கும்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நோயான Covid-19 தீவிர நிலையில் மனிதர்கள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

அதிகமான கொரோனா மரணங்களுக்கான காரணங்கள் பலவற்றில் முக்கியமான காரணமாக மூச்சு திணறல் தான் இருந்தது.

அந்த வகையில் கொரோனா சிகிச்சையில் எக்மோ கருவி சிறப்பாக உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

You May Also Like:

சொடக்கு தக்காளி நன்மைகள்