Table of Contents
ஊழிக்காலம் என்றால் என்ன
ஊழி = ஊழ் + அழி
ஊழ் = விதி
அழி = அழிதல்
ஊழி என்றால் முந்தைய இயற்கை விதிகள் அழிந்து புதிய இயற்கை பிறத்தல் ஆகும். இவ்வாறே இன்றைய உலகத்தில் உள்ள காலம் நேரம் எல்லாம் அழிந்து புதியன உண்டாவதே ஊழிக்காலம் என்பர்.
ஊழிக்காலம் விளக்கம்
இந்துகளின் சித்தாந்தப்படி பூவுலகம் இருக்கப்போகும் கால அளவு மகாயுகம் எனப் பெயரிடப்பட்டு அது நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சத்தியயுகம், திரோதயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகமாகும். தற்போது நடக்கும் யுகமான கலியுகத்தின் முடிவுநாளில் இப்பூவுலகு ஆழிப்பேரலைகளால் அழிவு காணும். அந்த காலமே ஊழிக்காலம் அதாவது யுகாந்தகாலம் ஆகும்.
உலகில் எல்லா உயிரினங்களும் பொருட்களும் மற்றும் இயற்கையான அமைப்புகளும் ஏதோ ஒரு நாளில் முற்றிலும் அழிந்துப்போய் விடக்கூடியவையேயாகும். அந்தக் குறிப்பிட்ட காலம் அதன் வாழ்வின் இறுதியான காலம் ஆகும். உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துப்விடக்கூடிய காலப்பகுதியை ஊழிக்காலம் எனக் குறிப்பிடலாம்.
ஊழிக்காலம் இரு வகைகளில் தோன்றலாம். அதாவது இயற்கை பேரிடர் நிகழும் போது ஏற்படலாம் அல்லது செயற்கையால் நிகழும்.
You May Also Like: |
---|
தனம் என்றால் என்ன |
வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை |