இந்த பதிவில் உளுந்தங்களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உளுத்தங்களி மிகமிக ஆரோக்கியமான உணவாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் உணவாகும்.
நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு உகந்தது⸴ இடுப்பு வலிக்கும் சிறந்தது⸴ எலும்பு வலுவடையும்⸴ வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு ஆரம்பகாலத்தில் செய்து கொடுக்க சிறந்த உணவு. காரணம் கருப்பை பலம் பெறுவதற்கு உதவுகின்றது.
இத்தகைய ஆரோக்கியம் மிக்க உளுந்தங்களி செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம் வாங்க!
Table of Contents
உளுந்தங்களி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து | 3/4 கப் |
ஏலக்காய் | 2 |
பச்சை அரிசி | 2 ஸ்பூன் |
கருப்பட்டி | 3/4 கப் |
நல்லெண்ணெய் | 3 ஸ்பூன் |
உளுந்து களி செய்முறை
ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். கூடவே ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
உளுந்தை இளம் சூட்டிலேயே ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் பச்சை அரிசியை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து வறுத்த அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த உளுந்து⸴ அரைத்த அரிசி இரண்டையும் சேர்த்து கூடவே தண்ணீர்⸴ உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் கருப்பட்டி தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். தண்ணீர் கொதித்ததும் அதில் உளுந்து⸴ அரிசி மாவு கலவையை கலந்து கைவிடாமல் கிளறி விடவும்.
பின்னர் அதில் கருப்பட்டி பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து நல்லெண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு 10 நிமிடம் மூடி வைத்து.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
இப்போது ஆரோக்கியம் மிக்க உளுத்தங்களி ரெடி!!!
You May Also Like: