உதடு கருமை நீங்க

சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும். நம் அழகை இன்னும் உயர்வாக காட்டுபவை உதடுகள். உதடு கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு

  • காலநிலை மாற்றம்.
  • மனச் சோர்வு.
  • குறைந்த இரத்த ஓட்டம்.
  • புகைப் பிடித்தல்.
  • ஊட்ட சத்து குறைபாடு.

உதடுகளின் கருமையை நீக்கி சிவப்பாக மாற்ற விரும்புவர்கள் இயற்கையான பொருட்களை கொண்டு பராமரித்து வந்தாலே போதும் “உதடு கருமை நீங்க” வைக்க முடியும்.

எலுமிச்சை

இரவில் தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாற்றில் தேனினை கலந்து உதட்டில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால் உதட்டில் உள்ள கருமையை நீக்கி சிவப்பாக மாற்ற முடியும்.

தேன்

தேனில் ஈரப்பத்தினை தக்க வைக்கும் தன்மை இயற்கையாகவே இருப்பதனால் உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

சிறிது தேனினை எடுத்து மசாச் செய்து 15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்சியான நீரினால் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தாலும் உதட்டில் உள்ள கருமை மறைந்து சிவப்பாக மாறும்.

கற்றாளை

கற்றாளை சாற்றினை இரவு தூங்குவதற்கு முன் உதட்டில் தடவி ஊற வைத்து காலையில் வெது வெதுப்பான நீரினில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு அழகாக மாறும்.

பீட்ருட்

பீட்ருட்டை துண்டுகளாக்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்மை ஆன பின்பு இரண்டு நிமிடங்கள் உதட்டில் மசாச் செய்து பின்பு 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதம் எண்ணெய்

பாதாம் எண்ணையை இரவில் தூங்குவதற்கு முன் உதட்டில் தடவி காலையில் கழுவ வேண்டும்.

இது உதட்டு கருமையை நீக்கி உதட்டை சிவப்பாக மாற்றும்.