இறைச்சி (meat) என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குத் திசுக்களைக் குறிக்கும். விலங்குகளின் தசைகள், மற்றும் அவற்றின் உறுப்புக்களான நுரையீரல், ஈரல் போன்றவையும் இதில் அடங்கும்.
இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்குகள் ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்கள் அனைத்துமுண்ணி என்பதால் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.
இறைச்சியை உண்பவர்கள் மாமிச உண்ணியாக கொள்ளப்படுபவர். இவ்வாறான இறைச்சிக்கு தமிழில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Table of Contents
இறைச்சி வேறு பெயர்கள்
- மாமிசம்
- கறி
- புலால்
- ஊண்
- அசைவம்
- கௌச்சி
இறைச்சியின் பண்புகள்
எல்லா தசைத் திசுக்களும் புரதச் சத்து மிக்கவை. மேலும் இன்றியமையாத அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளன. இத்திசுக்கள் குறைந்த காபோவைதரேற்றுக்களையே கொண்டுள்ளன. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தானது எந்த விலங்கின் இறைச்சி என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது.
உணவுக்காக பயன்படும் இறைச்சிகள்
- பன்றி
- ஆடு
- மாடு
- கோழி
- சேவல்
- சில கால்நடைகள்
- மீன்
- கடல் உணவுகள்
Read more: ஹலால் என்றால் என்ன