பூஜை அறையில் இறந்தவர்களின் படம் வைப்பதாக இருந்தால் கட்டாயம் வடக்கில் வைத்து தெற்கில் திசை பார்த்தவாறு வைப்பது மிகவும் நல்லது.
பூஜை அறையில் இறந்தவர்களின் படங்களை வைப்பதை தவிர்த்தல் நல்லது. ஏனென்றால் இறந்தவர்கள் வணங்குதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர்களே என்றாலும் இறைவனுக்கு ஒப்பானவர்கள் அல்ல என்பதால் பூஜையறையில் வைத்து வழிபடாமல் தனியாக வைத்து வணங்குவது தான் முழுமையான பலனை தரும்.
இறைவனின் முன்னால் பஞ்ச பாத்திர கலசத்தில் நீர் நிரம்பியிருப்பது போன்று இறந்தவர்களின் படங்களுக்கு முன்னால் செம்பு நிறைய நீர் வைப்பது அவர்களது ஆசிர்வாதத்தை அதிகரிக்கும்.
இறந்தவர்களுக்கு தினமும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்று அவசியமில்லை. ஏனென்றால் நாம் வருடத்திற்கு ஒருமுறை திதி கொடுக்கின்றோம் அதாவது இவ்வுலகை விட்டு நீங்கி சென்ற நாளாகும். அந்த நாளே அவர்களுக்குரிய வழிபாட்டிற்குரிய உகந்த நாளாகும். அன்றைய தினமே அக்குடும்பத்திற்கு அவர்களின் ஆசியும் அனுகிரகமும் பரிபூரணமாக கிடைக்கின்றது.
அன்றைய ஒரு தினமே அவர்கள் பித்துருலோகத்திலிருந்து நம்மை தேடி வருவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. பிதிருக்களை தினமும் அழைப்பது பொருத்தமற்றது. அது அவர்களுக்கு தொந்தரவினை கொடுக்கும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இறந்தவர்களுக்கு உணவளிக்கும் முகமாக காகத்திற்கு சோறு வைக்கலாம். இறந்தவர்களின் திதி, நாள் தெரியாதவர்கள் கூட வருடத்திற்கு ஒருமுறை வருகின்ற மகாளய அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தர்ப்பணம் செய்யலாம்.
அத்துடன் அவர்களுக்கு படையலும் செய்யலாம். இவ்வாறு செய்வதனால் அந்த குடும்பத்திற்கு நல்லதொரு மோட்சத்தை தரும். மகாளய அமாவாசை தினத்தன்று வழிபடுவதனால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கப் பெறும்.
You May Also Like : |
---|
கார்த்திகை மாத சிறப்புகள் |
மார்கழி மாதம் சிறப்புகள் |