அனைத்து உயிரினமும் தன் கடமைகளை எல்லாம் நிறைவு செய்த பின் ஓய்வு எடுக்கும் காலமே இரவாகும்.
இரவு என்பது “இர்” என்ற சொல்லடியிலிருந்து தோற்றம் பெற்றது. இரவு என்பது பூமியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் சூரிய ஒளி இல்லாது இருக்கும் காலப்பகுதியே ஆகும்.
இக்காலப்பகுதி நாட்டுக்கு நாடு வேறுபடும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவாகும். இது சூரியன் மறைவுக்கும் சூரியன் உதிப்பதற்கும் இடைப்பட்ட காலமாகும்.
ஓர் இரவுவும் ஓர் பகலும் கொண்டது ஓர் நாளாகும். அக்காலம் தொட்டு இக்காலம் வரை இரவு என்பது மகிமையுடையது. இவ்விரவுக்கு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Table of Contents
இரவு வேறு பெயர்கள்
- இரா
- இராத்திரி
- நிசி
- இருட்டு
- இருள்
- மங்குல்
- அல்
இரவு தோன்றும் முறை
பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும். இவ்வாறே இரவு தோன்றுகின்றது.
இரவின் சிறப்புக்கள்
- பூமியில் வாழும் எல்லா உயிரினமும் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகும்.
- நாளின் முடிவைக் காட்டும் நேரம்.
- பல அற்புதங்கள் இடம்பெறும் காலப்பகுதி.
- ஆரம்ப கால கவிகளால் அதிகளவாக போற்றி பாடப்பட்ட காலப்பகுதி.
- காதலர்களுக்கு உரிய காலப்பகுதி.
- சந்திரன் என்னும் அற்புதம் வெளித்தெரியும் காலம்.
இவ்வாறு சிறப்புடைய காலப்பகுதியே இரவாகும்.
Read more: வானம் வேறு பெயர்கள்