இரவில் ரீங்காரமிடும் உயிரினம் | மின்மினிப் பூச்சி |
இரவில் பல்வேறு உயிரினங்கள் நடமாடுகின்ற போதிலும் இரவு நேரத்தில் ரீங்காரம் செய்யும் உயிரினமாக மின்மினி பூச்சியை கூறலாம்.
Table of Contents
மின்மினிப் பூச்சி
மின்மினிப் பூச்சி இரவு நேரங்களில் ரீங்காரம் செய்யக் கூடியதாகும். பொதுவாக வெப்ப மண்டல பிரதேசங்களிலே வாழ்கின்றன. ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் நீரோடைகள் என வாழக் கூடியது.
இது சிறிய வகை வண்டுகளின் குடும்பத்தை சேர்ந்த உயிரினமாகும். இவை 0.5 முதல் 2cm நீளம் கொண்டவையாக காணப்படும். சிறிய தலைகளையும் பெரிய கண்களையும் கொண்டமைந்து காணப்படும். இதனது இறக்கைகள் மென்மையான தோற்றமுடையதாகும்.
மின்மினி பூச்சிகளினால் விவசாயத்திற்கு ஏற்படும் நன்மைகள்
விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்ற நத்தைகள் போன்றவற்றை மின்மினிப் பூச்சுக்கள் உட்கொள்கின்றன. மேலும் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளை அழிக்கின்றது. இதனூடாக பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றது.
மின்மினி பூச்சிகள் எவ்வாறு மின்னுகின்றன
மின்மினிப் பூச்சிகளின் உடலில் லூசிஃ பெரஸ் எனும் ஒளி உமிழும் ஒரு நொதிப் பொருள் காணப்படுகின்றது. இது கல்சியம் அடினோசைன் மற்றும் ட்ரைபாஸ்பேட் போன்றவற்றுடன் சேர்ந்து செயற்படும் போது இந்த ஒளி கிடைக்கின்றது.
அதாவது ஆக்ஸிஜன் இருக்கும் போது இந்த ஒளி ஏற்படுகின்றது. அது இல்லாத போது ஒளி ஏற்படாது. மின்மினிப் பூச்சிகளானவை ஆக்ஸிஜனை ஒரு வித தொடர் குழாய் மூலமே எடுத்து செல்கின்றது. ஏனெனில் மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல்கள் கிடையாது. மின்மினிப் பூச்சிகளின் ஒளியானவை குளிர்ந்ததாக காணப்படும்.
மின்மினி முட்டைகள்
மின்மினி பூச்சிகளின் முட்டைகள் இரவில் மின்னக் கூடியதாகவும் ஒளி வீசக் கூடியதாகவுமே காணப்படுகின்றது. மின்மினி முட்டைகளானவை எப்போதும் ஒளி வீசாது சில சந்தர்ப்பங்களில் மட்டுமே ஒளி வீசுகின்றது.
மேலும் மின்மினி பூச்சிகளில் பறக்கும் தன்மை இல்லாத மின்மினி பூச்சிகளே அதிகளவான முட்டைகளை இடுகின்றது. அந்த வகையில் இவை முட்டைகளை இட 3 முதல் 6 வாரங்கள் வரை காணப்படும்.
வெப்பமான சூழ்நிலைகள் காணப்படுமாயின் 3 முதல் 4 வாரத்திற்குள்ளாகவே பொரித்து விடும். முட்டையிலிருந்து இளம் புழுக்கள் வெளியாகுவதோடு இதனை லார்வாக்கள் என அழைப்பர். முட்டை மட்டுமல்லாமல் இந்த லாவாக்களும் ஒளி வீசும் தன்மையை கொண்டமைந்ததாகும்.
மின்மினி பூச்சிகளின் உணவு முறை
இவை லார்வா பருவத்தில் இருக்கும் போது நத்தை, புழு போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. பின்னர் பறக்கும் பருவத்தில் எவற்றை சாப்பிடுகின்றன என்பது தொடர்பில் சரியாக குறிப்பிட முடியாது.
சில விஞ்ஞானிகளின் கருத்தின் படி இவை சைவ ரீதியான உணவினை உட்கொள்கின்றது என கூறுகின்றனர். மகரந்த தேன்களையும் சில மின்மினி பூச்சிகள் உட்கொள்கின்றன.
வெயில் காலங்களில் மண்ணுக்கடியில் மறைந்து வாழ்கின்றது. மின்மினி பூச்சிகளின் உடலானது லூசியுபஜின் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்கின்றது. இதனால் பறவைகள் இவற்றை பிடிக்காமல் செல்கின்றது. சில வெளவால்கள் மின்மினி பூச்சிகளை பிடித்து சாப்பிடக் கூடியதாக காணப்படுகின்றன.
இன்றைய கால கட்டத்தில் மின்மினி பூச்சிகள்
இன்றைய கால கட்டத்தில் மின்மினி பூச்சிகளை காண்பது என்பது அரிதாகவே காணப்படுகின்றது. ஏனெனில் மின்மினி பூச்சிகள் இனப் பெருக்கும் விகிதம் குறைவடைந்தே காணப்படுகின்றது. ஏனெனில் இன்று ஒளி மாசுபாடுகள் அதிகளவில் இடம் பெறுகின்றமையே ஆகும்.
அதிகளவில் இரசாயன ரீதியான பூச்ச கொல்லி, களைக் கொல்லி மருந்துகளின் பயன்பாட்டின் காரணமாகவும் இவற்றின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு அவை சுதந்திரமாக திரிய தடை ஏற்படுகின்றது.
Read More: நாவல் பழத்தின் நன்மைகள்