இரத்த அழுத்தம் என்றால் என்ன

blood pressure in tamil

உடல் ஆரோக்கியம்தான் பிற செல்வங்கள் அனைத்தை விடவும் சிறந்ததாகும். இதனாலேயே “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனக் கூறுவர்.

இன்றைய சூழலில் பலவித நோய்கள் மனிதனை வந்தடைகின்றது. இதற்கு முதன்மைக் காரணம் மனித வாழ்க்கை முறையே என்றால் அதுமிகையல்ல.

இதயநோய் சார்ந்த பல நோய்கள் உள்ள போதிலும் இரத்த அழுத்த நோய் மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாக விளங்குகின்றது.

ஒருவருடைய இரத்த அழுத்தம் அவருடைய இதயம் சுருக்கம் மற்றும் விரிவை பொறுத்தே அமையும்.

உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ முதல் 140/90 மி.மீ. வரை உள்ள இரத்த அழுத்தத்தை வழக்கமானது என்றும்,

இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை “உயர் ரத்த அழுத்தம்” (High blood pressure) 100/70 மி.மீட்டரை விடக் குறைந்தால் அதை “குறை ரத்த அழுத்தம்” (Low blood pressure) என்றும் வரையறுத்துள்ளது.

பொதுவாக ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவு இருக்க வேண்டும். இதயம் சுருங்கும் போது இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனை சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (Systolic blood pressure) என்கின்றோம்.

ஆரோக்கியமான மனிதருக்கு இந்த Systolic blood pressure 90 இல் இருந்து 120 மில்லி மீட்டருக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.

இதேபோல் இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தம் கொஞ்சம் குறைவாக இருப்பதனை டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் (Diastolic blood Pressure) என்கிறோம். ஆரோக்கியமான மனிதருக்கு டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 60-80 மி.மீ பாதரச அளவு இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் என்றால் என்ன

நமது இதயமானதே தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கின்றது. இரத்தத்தை குறிப்பிட்ட ஓர் அழுத்தத்துடன் உடல் முழுவதும் செலுத்துகின்றது. இதனையே நாம் இரத்த அழுத்தம் என்கின்றோம்.

அழுத்தத்தின் மூலமாகவே ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் உடல் முழுவதும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. நம் இதயம் ரத்தத்தை பம் செய்யும் போது இரத்தம் எல்லா பகுதிகளுக்கும் செல்வதற்கு உதவும்.

இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை வைத்தே இரத்த அழுத்தம் கணிக்கப்படுகின்றது. இரத்த அழுத்தத்தை கணிக்க உதவும் கருவி நாடி அழுத்தமானி ஆகும்.

இரத்த அழுத்தம் ஏற்படும் விதம்

நமது இரத்த நாளங்களினால் இந்த இரத்த அழுத்தத்தை எளிதாய் தாங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இது திடமான தன்மையுடையதாகவும், மீள்தன்மையுடையதாகவும் இருப்பதினால் ஆகும்.

ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தால் இரத்த அழுத்தம் அதிகமானால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். இரத்தம் தடித்தாலோ, இரத்தத்தில் உள்ள நீரின் அளவு அதிகரித்தாலோ இரத்த நாளங்கள் சுருங்கினாலோ ஆபத்து ஏற்படலாம்.

இந்த சூழ்நிலைகளில் இதயம் இரத்தத்தை மிகவும் கடினமாக பம் செய்கின்றது. இதனால் இரத்த அழுத்தம் கடினமாகிறது. இப்படியே தொடர்ந்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்.

இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தினால் அது சிறிதாக கிழியக்கூட வாய்ப்பு உண்டு. இந்த இடத்தில் திசுக்கள் வீங்கும், வெள்ளை அணுக்கள் உடனே வந்து சேரும், அது தவிர கொழுப்புச்சத்தும் படரும், இதனால் இரத்த நாளங்கள் மேலும் சுருங்கி இரத்த அழுத்தம் கூடும்.

நமது உடலுக்கு தொடர்ச்சியாக செல்ல வேண்டிய இரத்தம் தடுக்கப்படுமாயின் அந்த இடங்களில் ஒக்சிஜன் மற்றும் சத்துப்பொருட்கள் குறைபாடுகள் ஏற்படும்.

இதனால் அவ்விடங்களில் உள்ள உயிரணுக்கள் மடியத் தொடங்கும். இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் அடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம்.

Read more: மன அழுத்தம் என்றால் என்ன

நீரிழிவு நோய் என்றால் என்ன