இந்த பதிவில் தமிழ் இலக்கியங்களில் முக்கியத்துவம் பெரும் “இரட்டை காப்பியங்கள் கட்டுரை” பதிவை காணலாம்.
இக்காப்பியங்கள் கூறும் நல்லொழுக்க சிந்தனை மிகவும் உயர்வானவையாக விளங்குகின்றன என்றால் மிகையல்ல.
Table of Contents
இரட்டை காப்பியங்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பெயருக்கான காரணம்
- அவையாவன
- ஒற்றுமை
- வேற்றுமை
- முடிவுரை
முன்னுரை
கரு ஒன்றாகவும் உரு இரண்டாகவும் தமிழில் வழங்கப்படுகின்ற இரட்டை காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றவையாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை என்பன காணப்படுகின்றன.
இவை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்கமருவிய காலத்தில் எழுந்த அறங்கூறும் அற்புத நூல்களாகும். அத்தோடு தமிழில் எழுந்த ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானதாகவும் இவை பார்க்கப்படுகின்றது.
இதன் தனித்துவ சிறப்புக்களால் இவை பெரும் பேசுபொருளாக இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் காணப்படுகின்றது இவை தொடர்பாக இக்கட்டுரையில் நோக்கலாம்.
பெயருக்கான காரணம்
இவ்விரண்டு காப்பியங்களும் ஒரே காலத்தில் எழுந்தன என்பதனால் இரட்டை காப்பியங்கள் என்று அறியப்படுகின்றன. அது மாத்திரமின்றி இவற்றின் கதைப் பின்னணியும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவையாக காணப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளும் மணிமேகலையினை சீத்தலைசாத்தனாரும் படைத்தனர் என்று அறியப்படுகின்றது.
இக்காப்பியத்திலே வருகின்ற கதை மாந்தர்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய் இருப்பதால் இரட்டை காப்பியங்கள் என்று பெயர் கொள்ளலாயிற்று.
அவையாவன
அந்த வகையில் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் கோவலன் மற்றும் கண்ணகி போன்றவர்களது வரலாற்றை கூறுகின்ற காப்பியமாக காணப்படுகின்றது.
அதே சமயம் மணிமேகலையானது மாதவியின் மகளான மணிமேகலையின் கதை கூறுவதாக அமைந்திருக்கின்றது.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உலகியல் வாழ்வில் வெறுப்படைந்து அறவழியில் வாழ மக்களை வலியுறுத்துவதாக இந்த காப்பியங்கள் அமைந்துள்ளன. சமண மதத்தை போதிப்பதாக இவை காணப்பவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒற்றுமை
இவ்விரண்டு காப்பியங்களும் தம்மிடையே பல்வேறான ஒற்றுமை தன்மைகளை கொண்டு காணப்படுகின்றன. அந்தவகையில் இவை இரண்டும் இரண்டாம் நூற்றாண்டில் எழுந்தன.
மற்றும் இரண்டுமே முப்பது காதைகளை உள்ளடக்கிய காப்பியங்களாக காணப்படுகின்றன.
அவ்வகையில் இரண்டும் ஆசிரியப்பா வகையில் பாடப்பட்டுள்ன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அது மாத்திரமின்றி இவ்விரு காப்பியங்களில் வருகின்ற கதை மாந்தர்கள் உறவினர்களாக காணப்படுகின்றனர் மற்றும் கதைக்களம் ஒன்றாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வேற்றுமை
எவ்வாறாக இருப்பினும் இரு காப்பியங்களிடையேயும் சில வேற்றுமை இயல்புகளும் காணப்படவே செய்கின்றன.
அந்தவகையில் சிலப்பதிகாரம் கண்ணகியின் கற்பின் திறனை பேசுகின்றது மாறாக மணிமேகலை அறத்தின் பெருமையினை பாடுகின்றது.
அவ்வாறே சிலப்பதிகாரம் நீதி நிலைபெறுதல் தொடர்பாக பேசுகின்ற போது மணிமேகலை பசிபிணி நீங்குதல் தொடர்பாக பேசி நிற்கின்றது.
இறுதியாக கண்ணகி தெய்வநிலையை அடைந்தமை பேசப்படுகின்ற அதேசமயம் மணிமேகலை இறைபணி செய்வதாக கூறுகின்றமை வேற்றுமையாக கூற முடியும்.
முடிவுரை
குறிப்பாக இவ்விரண்டு காப்பியங்களும் தமிழ் இலக்கியங்களில் தனித்துவமானவை. இவை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியன என்பது மறுக்க முடியாதது.
அது மாத்திரமின்றி அக்காலத்து அழகான வாழ்வியலை பிரதிபலிப்பதோடு பிற்கால இலக்கியங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தது.
அத்துடன் இக்காப்பியங்கள் கூறும் நல்லொழுக்க சிந்தனை மிகவும் உயர்வானவையாக விளங்குகின்றன என்றால் மிகையல்ல.
You May Also Like : |
---|
இளமையில் கல்வி கட்டுரை |
ஆசிரியர் பணி கட்டுரை |