ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் அடையாளத்தை பிரதிபலிக்கும் முகமாக பல தேசிய சின்னங்கள் காணப்படுகின்றன.
அதாவது தேசியகொடி, தேசிய இலட்சனை, தேசிய விலங்கு, தேசிய மொழி, தேசிய விளையாட்டு, தேசிய பறவை, தேசியமரம் போன்றன அவற்றுள் சிலவாகும்.
அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் இந்தியாவின் தேசியக்கொடி பற்றிய பலரும் அறிந்திராத பல விடயங்கள் பற்றி பார்ப்போம்.
Table of Contents
இந்திய தேசிய கொடி விளக்கம்
தேசியக்கொடியில் மூன்று நிறங்கள் காணப்படுகின்றன. காவி, வெண்மை, பச்சை என மூன்று நிறங்கள் காணப்படுகின்றன. ஆதலால் தேசியக்கொடி மூவர்ண கொடி என அழைக்கப்படுகின்றது.
இந்தியாவின் விடுதலைக்காக போராட்ட வீரர்கள் செய்த அர்ப்பணிப்பின் அடையாளமாக போற்றப்படும் இந்திய தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ள மூவர்ண நிறங்கள் பின்வருவனவற்றை உணர்த்துகின்றன.
காவி :- தைரியம் மற்றும் தியாக உணர்வு
வெண்மை :- உண்மை, தூய்மை மற்றும் அமைதி
பச்சை :- செழுமையையும் வளத்தையும் குறிக்கின்றன.
இந்திய நாட்டின் தேசியக்கொடி நீள, அகல 3:2 என்ற விகிதத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் தேசியக்கொடியின் நடுவில் ஒரு வெள்ளை நிற அசோகச்சக்கரம் ஒன்று உள்ளது.
அசோகச் சக்கரத்தின் நடுவில் 24 ஆரங்கள் காணப்படுகின்றன. இந்த அசோகச்சக்கரம் கடல் மற்றும் மேகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும், குறிப்பாக தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமைந்துள்ளது.
தேசியக்கொடியில் உள்ள நிறங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தத்துவம் உள்ளதைப் போன்று இந்த அசோகச்சக்கரம் அற வழியையும், அமைதியையும் உணர்த்துகின்றது.
தேசியக்கொடியின் அறிமுகம்
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக்கொடி தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் நெய்யப்பட்டது. ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த “பிங்களி வெங்கய்யா” என்பவர் தேசியக்கொடியை வடிவமைத்தார்.
இந்தியாவின் எளிமையைப் போற்றும் வகையில் தேசிய கொடி கதர் நூலினால் மட்டுமே நெய்யப்பட வேண்டும் என்பதும் தேசியக்கொடி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 யூலை 22ல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.
1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரத்தைக் காற்றை சுவாசித்த போது ராஷ்டிரபதிபவன்ச என்ற பெயர் சூட்டப்பட்ட தில்லி வைஸ்ராய் ஹவுஸில் 31 குண்டுகள் முழுங்க இந்திய தேசியக்கொடி முதன்முதலாக பறக்க விடப்பட்டது. இக்கொடியைப் பண்டிதர் ஜவகர்லால் நேரு அவர்கள் செங்கோட்டையில் ஏற்றினார்.
இந்த தேசியக்கொடி சென்னையில் உள்ள ஜோர்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
எல்லா வருடமும் ஆகஸ்ட் 15 தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் சடங்கு 1948 முதல் துவங்கியது. 2002ஆம் ஆண்டு ஜனவரி 21முதல் நாட்டு மக்கள் தேசியக்கொடியை எல்லா நாட்களிலும் ஏற்றலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
தேசியக்கொடி ஏற்றும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
அனைத்து மக்களும் தேசியக்கொடிக்குரிய மரியாதையை வழங்க வேண்டும். தேசியக்கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக்கொடியின் வலது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்க விடக் கூடாது. கம்பத்தின் உச்சி வரை கொடி உயர்ந்திருக்க வேண்டும். சூரியன் மறையும் முன் தேசியக்கொடியை இறக்கிவிட வேண்டும்.
இந்தியாவின் தலைவர் இறந்து விட்டாலோ / நட்பு நாட்டின் தலைவர் இறந்து விட்டாலோ தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும்.
கொடியை கம்பத்தில் ஏற்றும் போது எல்லோரும் எழுந்து கவனமாக நிற்க வேண்டும். அனைத்து மக்களும் தேசியக்கொடிக்குரிய மரியாதையை வழங்க வேண்டும்.
Read more: இந்தியாவின் சிறப்புகள் கட்டுரை