மனிதனுக்கு பல உணர்வுகள் ஏற்படுகின்றன. அவ்வாறான குணங்களை நவரசங்கள் என்பார்கள் அதில் ஒன்றே ஆவேசம் ஆகும்.
அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வை ஆவேசம் எனலாம்.
மற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வையும் ஆவேசம் எனலாம். அதிக கோபமான சந்தர்ப்பங்களிலேயே ஆவேச உணர்வு தோன்றும்.
இந்த ஆவேச உணர்வானது இடத்திற்கு ஏற்பவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் மாறுபட்டு அமையும். இவ்வாறான ஆவேச உணர்வானது பல பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றது.
ஆவேசம் வேறு சொல்
- பெருங்கோபம்
- அகோரம்
- மனவெழுச்சி
- ஆக்ரோசம்
- ஆத்திரம்
- கடுகடுப்பு
- காட்டம்
- குரோதம்
- மூர்க்கம்
- வீராவேசம்
- கோபம்
- சிடுசிடுப்பு
- சினம்
- சீற்றம்
- ரௌத்திரம்
- மதம்
- வெறி
Read more: கண்டக சனி என்றால் என்ன