Table of Contents
அறிமுகம்
உலகில் அனைவரும் வெற்றி பெறவே ஆசைப்படுகின்றனர். அதாவது விரும்பியதை அடைவதையே விரும்புகின்றனர். விரும்பியதை அடையும் போது மகிழ்வாக உணர்கின்றனர்.
இயற்கை நம் உடலோடும், ஐம்புலன்களோடும் கலந்துள்ளது. இந்த உடலுக்கும், ஐம்புலன்களுக்கும் உலகப் பொருள்களின் தொடர்பு தேவைப்படுகின்றது.
உலகப் பொருட்களின் தொடர்பு கிட்டாத போது அல்லது அடைய முடியாத போது மகிழ்ச்சி மறைந்து துன்பம் ஏற்படுகின்றது. மகிழ்ச்சியாக இருக்கவே மனம் விரும்புகின்றது.
மகிழ்ச்சி அடைவதற்கான முயற்சியும், முனைப்பும், வேட்கையும் தன்னம்பிக்கை எனும் தன்மையாய் வெளிப்படுகின்றது. இத்தகைய தன்னம்பிக்கை வளர வேண்டுமெனில் தங்களின் ஆளமையை மனிதன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆளுமை என்றால் என்ன
ஆளுமை என்பது ஒருவரது நடை, உடை, பாவனை, குணம், உணர்ச்சி, அறிவு, ஆற்றல், பண்பாடு போன்றவற்றின் வளர்ச்சியை மற்றும் முதிர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மொத்த வெளிப்பாடு எனலாம்.
மேலும் ஆளுமை என்பது ஒருவரின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு எனலாம்.
குணத்தில் ஆளுமை (Emotional Personality)
எவ்வாறு உருவத்தில் ஆளமையைக் காட்டுவது முக்கியமோ அதாவது முதல் பார்வையிலேயே மற்றவர்களிடம் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வது முக்கியமோ அதுபோல் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கையாள்வதிலும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதும் முக்கியமானதாகும்.
உலகமே ஓர் நாடக மேடையாகவும் அதில் எல்லா மனிதர்களும் நடிகர்களாகவும் பல வேடமிட்டு நடிக்கின்ற கதாபாத்திரங்களாகவும் மனித வாழ்க்கை இருக்கின்றது.
ஒரே மனிதன் பல பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது அவசியமாகின்றது.
ஒவ்வொரு பாத்திரங்களுக்குமேற்ப தன் குணத்தை, ஆளுமையை வெளிப்படுத்தி இவ்வுலகின் முன் தன்னை உயர்த்திக் காட்டவும், உயர்த்திக் கொள்ளவும் வேண்டும்.
தன்னம்பிக்கை மிக்க தலைமைப் பொறுப்புள்ளவர்கள் கோபத்தை வெளிக்காட்டும் போது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் தன்னை மறந்து கோபம் கொள்ளும் போது ஆளுமை வளர்ச்சியடையாது.
அதற்குப் பதிலாகத் தவறு செய்தவர்களை அழைத்து அவர்களின் பணிகளிலுள்ள முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறி அவர்களின் வளர்ச்சியில் நமக்கு இருக்கும் அக்கறையையும், அன்பையும் வெளிக்காட்டும் போது ஆளுமை வளரும்.
அறிவில் ஆளுமை
நாம் நம் ஆளுமையைச் சமுதாயத்தில் வெளிப்படுத்த வேண்டுமெனில் முதலில் நாம் அறிவை வளர்க்க வேண்டும். கற்ற துறையில் மட்டுமன்றி பொதுத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். கற்ற அறிவைச் சான்றோர் முன்னிலையில் விரித்துரைக்க பழக வேண்டும்.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கேற்ப நம் அறிவைப் பிறருக்கும் புகட்டி அவர்களையும் உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.
அறிவார்ந்த மனிதர்களால்தான் தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ முடியும். குறைந்தபட்சம் நாம் உருவத்தில் ஆளமை, குணத்தில் ஆளுமை, அறிவில் ஆளுமை, ஆன்மீக ஆளுமை போன்ற நான்கிலும் எமது ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும், ஆழப்படுத்திக் கொள்ளவும் முயன்றால் தன்னம்பிக்கையுடன் சிறந்த வாழ்வை வாழ முடியும்.
You May Also Like : |
---|
மன அழுத்தம் என்றால் என்ன |
மோட்சம் என்றால் என்ன |