ஆயுத பூஜை என்றால் என்ன

ayudha pooja endral enna

நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவாக ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றுக்குரிய கடவுள்களை போற்றித் துதிப்பதே நவராத்திரி விழாவின் நோக்கமாகும். இவ்வாறான புனித நாளில் ஒன்று நாளாக ஆயுத பூஜை காணப்படுகின்றது.

ஆயுத பூஜை என்றால் என்ன

ஆயுத பூஜை என்பது நவராத்திரி நாளின் ஒன்பதாவது நாள் இடம் பெறும் பூஜையாகும். இந்த நாளில் தொழில் புரிவோர் தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தாங்கள் சிறப்பு வாழ வேண்டும் என்பதற்காக, தான் தொழில் புரியும் இடத்தினை சுத்தம் செய்து தொழில் புரியும் கருவிகளுக்கு வழிபாடுகள் செய்தல் ஆயுத பூஜைய என அழைக்கப்படுகிறது.

ஆயுத பூஜை வேறு பெயர்கள்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜையானது சற்று வித்தியாசமாக பெயரிடப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் எப்படி அழைக்கப்படுகிறது என்பதை நோக்குவோம்.

  • ஆந்திரா & தெலுங்கானா :- ஆயுத பூஜா
  • கர்நாடகா :- ஆயுத பூஜே
  • கேரளா :- ஆயுத பூஜா
  • மகாராஷ்டிரா :- காண்டே நவமி
  • தமிழ்நாடு :- ஆயுத பூஜை

ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது

கொடியன் மஹிஷாசுரன் தனது படையுடன் இணைந்து தேவி சாமுண்டேஸ்வரியை அழிக்கும் நோக்கத்துடன் சண்டையிட்டு வந்தான்.

இறுதியாக மஹிஷாசுரன் செய்யும் அக்கிரமங்களை பார்த்து ஆக்ரோஷமாக அவதாரம் எடுத்தாள். அந்த அவதாரமே துர்கை அவதாரம்.

தனது கூர்வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு மஹிஷாசுரனை வதம் செய்தாள். இதன் காரணமாக ஆயுத பூஜை வழிபாடு காலம் காலமாக நடத்தப்படுகிறது என்று புராண கதைகள் சில கூறுகிறது.

மேலும் பிற புராண கதைகளில் குருக்‌ஷேத்திரா போருக்கு புறப்பட்ட அர்ஜுனன் தனது ஆயுதங்களை பிரயோகித்து போர் புரிந்தார். அந்த போரில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை வழிபாடு

நவராத்திரியின் 8வது நாளுக்கு பிறகு 9வது நாளில் அனைத்து ஆயுதம், உலோகங்களால் ஆன பொருட்கள், வாகனம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இயந்திரங்கள் என அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து அதற்கு குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் புத்தகம், பேனா, பென்சில் என அனைத்தையும் சாமி படம் முன்பு குங்குமம் பொட்டிட்டு நான்கு முனைகளிலும் மஞ்சள் பொட்டு வைத்து வழிபடுவார்கள்.

வண்ணம் மற்றும் வாசனை நிறைந்த பூக்களால் சாமி படங்களுக்கும் விக்கிரகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்படும். பிறகு பொரி, பழங்கள், இனிப்பு என பல வகை பலகாரங்களை சாமிக்கு படையல் அளிப்பது வழக்கம்.

ஆயுத பூஜையில் வழிப்பட வேண்டிய மூன்று முக்கிய தெய்வங்கள்

ஆயுத பூஜையன்று அறிவாற்றல் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவி, தூய்மை உள்ளத்தை வழங்கம் பார்வதி மற்றும் செல்வச் செழிப்பை அளிக்கும் தேவி லட்சுமி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.

ஆயுத பூஜை இறை வழிபாட்டின் பலன்கள்

இந்த நாளின் இறைவழிபாட்டின் மூலம், துன்பங்களும் தடைகளும் நீங்கி கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்லதையே ஆசிர்வதிக்க வேண்டும் என்று பெண் தெய்வங்களிடம் வழிப்படுவது நன்மையை உண்டாக்கும்.

Read more: விஜயதசமி என்றால் என்ன

கரிநாள் என்றால் என்ன