இந்த பதிவில் ஆதாயம் என்றால் என்ன என்பது பற்றி விரிவாக காணலாம்.
Table of Contents
ஆதாயம் என்றால் என்ன
ஆதாயம் என்பது பொதுவாக எந்த ஒரு விடயத்திலும் பெறுகின்ற இலாபத்தை குறிக்கும்.
இது பொதுவாக மனிதர்களால் உணரப்படலாம் அல்லது உணரப்படாமல் இருக்கலாம்.
முதலீட்டாளர் தனது சொத்தை விற்று பணம் பெறும்போது அவர் பெறும் இலாபத்தை குறிப்பது உணரப்படக்கூடிய ஆதாயம் ஆகும். இதன்போது குறித்த நபர் தனது இலாபம் குறித்து மகிழ்ச்சி எனும் உணர்ச்சியை உணருவார்.
உணரப்படாத ஆதாயம் என்பது காகித ஆதாயத்தை குறிக்கிறது. இதன் பொருள் உரிமையாளர் இன்னும் சொத்தை விற்கவில்லை என்பதாகும். விற்காத போது எந்த இலாபத்தையோ அல்லது மனவெழுச்சி நிலைமையையோ பெற முடியாது.
ஆதாயம் எனும் சொல்லின் பொருள்
இலாபம்
ஆதாயம் என்னும் சொல்லின் வாக்கியப் பயன்பாடு
10 ரூபாய் ஆதாயம்.
மதுரைத் தேர்தலில் யாருக்கு ஆதாயம்?
ஆதாயம் இல்லாமல் அவர் யாரோடும் பேச மாட்டார்.
அரசியலில் ஆதாயம் தேடுபவர் அவர் அல்ல.
மூலதன ஆதாயம்
மூலதன ஆதாயம் என்பது பங்கு, பத்திரம் போன்ற மூலதன சொத்தின் விற்பனையின் விளைவாக கிடைக்கும் இலாபத்தை குறிக்கும்.
ஒரு சொத்தை விற்பனை செய்யும்போது அந்த சொத்தின் விற்பனை விலை கொள்விலையை விட அதிகமாக உள்ளது எனில் அதன் மூலம் நாம் பெறும் இலாபம் மூலதன ஆதாயம் ஆகும்.
ஒருவேளை இலாபத்திற்கு பதிலாக இழப்பு ஏற்பட்டால் அது மூலதன இழப்பாகும். மூலதன ஆதாயம் குறுகிய கால அல்லது நீண்டகாலமாக இருக்கலாம்.
You May Also Like: |
---|
ஹலால் என்றால் என்ன |
காபந்து அரசு என்றால் என்ன |