ஆடம்பரம் வேறு சொல்

ஆடம்பரம் வேறு பெயர்கள்

ஆடம்பரம் வேறு சொல்

“மனநிறைவு என்பது இயற்கையிலேயே எம்மிடம் இருக்கும் செல்வம் ஆடம்பரம் நாம் தேடிக்கொள்ளும் வறுமை” என்று சாக்கிரடீஸ் கூறுகின்றார்.

நாம் கண்ட எத்தனையோ அறிஞர்கள் வசதியான குடும்பத்தில் இருந்தும் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்தார்கள். உதாரணமாக கன்பியூசியஸ் வசதியான குடும்பத்தில் பிறந்தும் ஏழ்மையான வாழ்வையே வாழ்ந்தார்.

ஆனால் நம்மில் பலர் தன்னிடம் வசதி காணப்படுகின்றது என்பதை பறைசாற்றும் விதமாக வாழ்வதை நாம் இங்கு காண்கின்றோம்.

உதாரணமாக தேவைக்கு அதிகமாக ஆடை, ஆபரணங்கள், வாகனங்கள் என்பவற்றை வாங்கி குவிப்பது மற்றும் ஆடம்பரமாக பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவது, ஆடம்பரமாக திருமண விழாக்களை நடத்துவது என நம்மில் சிலர் வாழ்வதைக் காண்கின்றோம்.

அதுமட்டுமல்ல ஆடம்பரமாக வாழ்பவர்கள் ஏழைகளை மதிக்காமல் நடப்பதையும் நாம் கண்முன்னே காண்கின்றோம். இவ்வாறு வாழ்பவர்கள் செல்வம் நிலையில்லாதது என்பதை மறந்தே செயற்படுகின்றனர் எனலாம்.

ஆடம்பரம் வேறு சொல்

  • பகட்டு
  • படோடாம்
  • விமர்சை
  • வீண்செலவு

ஆடம்பரம் பற்றிய மேற்கோள்கள்

“ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையின் மீதுதான் பெரும்பாலான இராஜ்சியங்கள் மாய்ந்தொழிந்தன.”

“யுத்தம் மனிதர்களை அழிக்கின்றது. ஆனால், சொகுசான வாழ்க்கை மனித சமூகத்தையே அழிக்கின்றது. உடல்களையும் உள்ளங்களையும் அரித்து விடுகின்றன.

“பேராசையும் சொகுசும் பெருமை மிக்க அரசாங்கம் ஒவ்வொன்றையும் அழிக்கும் தொற்று நோய்கள்.

Read more: இறந்தவர்களை வழிபடும் முறை

பொங்கு சனி என்றால் என்ன