ஒரு விடயம் நாம் எண்ணிய படியே நடக்கும் என்று நம்பி இருக்கும் தருணத்தில் நாம் நினைக்காதது அதாவது எதிர்பாராத விடயம் ஒன்று நடைபெறும் போது ஏற்படும் உணர்வு ஆச்சரியம் எனப்படும்.
நடைபெறும் நிகழ்வு நன்மையானதாகவோ தீமையானதாகவோ சிறிய அல்லது பெரிய நிகழ்வாகவோ ஏற்படலாம். எது எவ்வாறாக இருப்பினும் எதிர்பாராத விடயம் இடம்பெறும் போது ஆச்சரியம் உண்டாகும்.
இவ்வாறான ஆச்சரியம் என்ற உணர்வு சில சமயம் மகிழ்வையும் சில சமயம் துக்கத்தையும் ஏற்படுத்த வல்லது.
சிலருக்கு ஆச்சரியம் ஏற்படும் போது அது உயிரிழப்புக்கு கூட கொண்டு செல்லும். எதையும் தாங்க முடியாத இதயம் கொண்டவர்க்கு இவ்வாறான நிலை ஏற்படலாம்.
Table of Contents
ஆச்சரியம் வேறு சொல்
- வியப்பு
- அதிசயம்
- திகைப்பு
- பிரம்மிப்பு
- மலைப்பு
- விசித்திரம்
- விந்தை
- வினோதம்
- அற்புதம்
- அதிர்ச்சி
அதாவது ஒருவன் தான் எண்ணிய சட்டதிட்டத்தின் படி தான் எண்ணிய நிகழ்வு நடைபெறாவிடின் ஆச்சரியம் ஏற்படும் மேலும் எதிர்பாராத விடயம் இடம்பெறும் போதும் ஆச்சரியம் ஏற்படக்கூடும்.
ஆச்சரியம் ஏற்படும் பொது உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள்
- கண்களின் புருவங்கள் மேலுயர்ந்து வளைவாகும்.
- சமநிலையான கோடுகள் நெற்றியில் தோன்றும்.
- கண்கள் விரிந்து வெள்ளை நிற பகுதி அதிகமாக தெரிய வரும். கண்கள் விரியும் அளவினைக் கொண்டு எவ்வளவு ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது என்பதை அறியலாம்.
- வாய் திறந்து கீழ் தாடை கீழே விழுதல். இவ்வாறான மாற்றங்கள் ஆச்சரியம் ஏற்படும் போது உண்டாகும்.
Read more: மலச்சிக்கல் தீர எளிய வழிகள்