ஒரு மாதத்தில் வளர்பிறை காலத்தில் 14 திதிகளும், தேய்பிறை காலத்தில் 14 திதிகளும் என 28 நாட்கள் வருகிறது. மீதம் இரண்டு தினங்களில் ஒன்று அமாவாசை மற்றொன்று பௌர்ணமி என மொத்தமாக 30 நாட்கள் என ஒரு மாதம் பூர்த்தி அடைகிறது. இத்திதிகளில் அஷ்டமி திதியும் ஒன்றாகும்.
Table of Contents
அஷ்டமி என்றால் என்ன
அஷ்டமி திதி என்பது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் எட்டாவது நாள் ஆகும். அதாவது அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி ஆகும்.
அஷ்டமியின் ஆட்சி தெய்வம்
பொதுவாக ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரத்தின்படி எட்டு என்பது சந்திர பகவானின் ஆற்றல் கொண்ட ஒரு எண்ணாகும்.
புராண, இதிகாசங்களின் படி சனி பகவான் ஒரு நீதி தேவன் ஆவான். அதனால் எவரொருவர் சிறிய அளவு தீவினையை புரிந்தாலும் அதற்கான தண்டனையை உடனே வழங்கி நீதியினை நிலை நாட்டுபவராக இவர் காணப்படுகிறார்.
இதன் காரணமாக, சனிபகவானையும் அவரின் ஆற்றல் கொண்ட எட்டாம் எண்ணையும் கண்டு பெரும்பாலானோர் கலக்கம் அடைகின்றனர்.
அஷ்டமியில் நல்ல காரியம் செய்யலாமா
பொதுவாக வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் வரும் எந்த ஒரு அஷ்டமி திதியிலும் சுப காரியங்கள் செய்யப்படுவது இல்லை. ஆனால் இறை வழிபாடு செய்ய வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமிகள் சிறந்த நாட்களாக கூறப்படுகிறது.
அஷ்டமி பற்றிய கருத்துக்கள்
ஆவணி மாத அஷ்டமி திதியில் கிருஷ்ண பரமாத்மா அவதரித்தார். அப்படி அவர் அவதரித்த கண்ணபகவான் தன் சொந்த தாய் மாமனான கம்சனை வதம் புரிந்தார்.
இதன் காரணமாக பெரும்பாலானோர் தங்களுக்கு அஷ்டம திதிகள் பிறக்கும் ஆண் குழந்தையால், குழந்தையின் தாய் மாமனுக்கு ஆபத்து ஏற்படும் என நம்பி அஞ்சுகின்றனர்.
அத்துடன் சனியன் சாபம் கோபம் உள்ளவருக்கு மட்டும் தான் அஷ்டம திதிகள் சில விபத்துக்கள் நடக்கிறது என்றும், சிலருக்கு இரவு தூக்கம் கெடுகிறது என்றும், சிலருக்கு காரிய தடைகள் ஏற்படுகிறது என்றும் சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அஷ்டமியில் என்ன செய்யலாம்
- அஷ்டமி அழிக்கும் தன்மை உடைய திதி என்பதனால் இந்நாள் சண்டை(போர்கள்) தொடங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
- காவல்துறைக்கு புதிதாக பணிக்கு செல்பவர்கள் செல்லலாம்.
- தீய செயல்களை தடுப்பதற்கு ஹோமம், பூஜைகள் செய்யப்படுகிறது.
- இந்நாளை அதிகளவானோர் தமது கடன் தொகையினை அடைக்க பயன்படுத்துகின்றனர்.
அஷ்டமியின் சிறப்பு
- ஆவணி மாதத்தின் அஷ்டமி திதிகள் கிருஷ்ண பரமாத்மா அவதரித்தார்.
- தேய்பிறை புதன்கிழமை அஷ்டமி திதியில் வைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கின்ற சிவபெருமான் பூமிக்கு வந்தார்.
அஷ்டமி திதியில் பிறந்தால் குணப்பண்புகள்
- குழந்தைகளின் மேல் மிகவும் அன்பு உடையவர்களாக இருப்பர்.
- இரக்க குணம் உடையவர்களாக இருப்பர்.
- நேர்மையானவர்களாக இருப்பர்.
- ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பர்.
- சுதந்திர உணர்வு கொண்டவராக இருப்பர்.
- நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மனதினை கொண்டிருப்பர்.
- சாமர்த்தியமானவர்களாக இருப்பர்.
அஷ்டமி வழிபாடும் பலன்களும்
- வளர்பிறை அஷ்டமியில் செல்வம் பெருக திருமாலின் இதயத்தில் வீற்றுப்பவளான இலட்சுமிதேவியை வழிபாடு செய்ய வேண்டும்.
- தேய்பிறை அஷ்டமியில் சனி பகவானின் தோஷத்தை நீக்க வைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.
- புதன்கிழமை வரும் அஷ்டமிகள் நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால், அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் மேன்மை அடையும்.
- வியாழன் அன்று வரும் அஷ்டமி வளரும் (அட்சயம்) பலனை தரும் தன்மையுடையது.
- வெள்ளி அன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளை தரும்.
- 108 அஷ்டமிகள் சிவசக்தி தரிசனம் செய்தவர்களை சனிபகவானும் அஷ்டம விதியும் ஒன்றும் செய்ய இயலாது.
Read more: தர்ப்பணம் என்றால் என்ன