அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன

ardhastama sani in tamil

நவக்கிரகங்களில் ஓர் தெய்வமாக காணப்படும் சனிபகவான். 1 தொடக்கம் 12 கட்டங்களில் ஒருவரது ஜாதகத்தில் பயணிக்கின்றார். அவ்வாறு சனிபகவான் பயணிக்கும் ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகின்றது.

அந்த ஒவ்வொரு நிலைகளிலும் சனி பகவான் பல நன்மைகளையும் படிப்பினைகளையும் ஒவ்வொருவருக்கும்  வழங்குகின்றார். அந்த வகையில் அர்த்தாஷ்டம சனி பற்றி நோக்குவோம்.

அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன

சனிபகவான் ஒரு இராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் நிலை அந்த ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆகும்.

அர்த்தாஷ்டம சனி ஆனது கிரகங்களின் பார்வை, லக்ன சுபர் மற்றும் அசுபர் என்ற நிலைக்கு ஏற்றார் போல தன் பலன்களைத் தருவதாக இருக்கும்.

அர்த்தாஷ்டம சனியின் தாக்கம்

  • அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் உள்ளவர்கள் எடுத்துவைக்கும் முயற்சியில் வெற்றியை பெறாமல் ,மீண்டும் பழையநிலையையே வந்து அடைவர்.
  • உறவினர்கள், நண்பர்கள் வழியில் சில வருத்தமான நிகழ்வுகள் ஏற்படும்.
  • கல்வியில் மந்த நிலை ஏற்படும்.
  • அர்த்தாஷ்டம சனி நடக்கக்கூடிய ராசிக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுத்தி மருத்துவ செலவுக்கான திடீர் செலவுகள் ஏற்படுத்தும். அதனால் சேமிப்பு பணம் விரயமாகக் கூடிய நிலை ஏற்படும்.
  • பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தும்.
  • மற்றவர்களின் விஷயங்களிலிருந்து தள்ளி நிற்காமல் அதற்குள் நுழைந்து வீண் வம்புகளை சேர்த்து கொள்ளுவார்கள்.
  • தொழிலில் மிக கவனமாக இருப்பது அவசியம். தன் சோம்பலால் பணியை சரியாக முடிக்க முடியாத சூழல் உருவாகும்.
  • உடல் நல பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

அர்த்தாஷ்டம சனிக்கான பரிகாரங்கள்

ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுதல் வேண்டும். இதன் மூலம் நம்பிக்கையும், முயற்சியும் அதிகரிக்கும்.

சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.

அனுமனை வழிபடுதல் வேண்டும். இது  செயலுக்கு பல மடங்கு பலனைத் தரும்.

வீட்டில் அல்லது ஆலயங்களில் சனி பகவானுக்கு தீபங்கள் ஏற்றி, எள் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வழிபட்டு வரவேண்டும்.

வழிபாடு முடிந்த பிறகு அந்த எள் சாதத்தை யாசகர்களுக்கு உண்ணக்கொடுத்து, சிறிது  பணத்தையும் சேர்த்து தானமாக கொடுத்தல் வேண்டும்.

தினந்தோறும்  காலையில் காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து பின்னரே சாப்பிடுதல் வேண்டும்.

வீட்டில் நவகிரக் ஹோமம் செய்தால் சனி கிரகத்தின் பாதகமான நிலையால் ஏற்படக்கூடிய கடுமையான  பலன்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

Read more: பாத சனி என்றால் என்ன

பொங்கு சனி என்றால் என்ன

ஜென்ம சனி என்றால் என்ன