அரசன் வேறு பெயர்கள்

அரசன் வேறு சொல்

அரசன் வேறு பெயர்கள்

அரசன் என்பவன் நாட்டை காப்பவன் ஆவான். நாடு ஒன்று இருக்குமானால் அங்கு அரசன் என்பவன் அவசியம் தேவைப்படுகின்றான். மக்களின் தேவைகளை நிறைவு செய்ய அரசன் என்பவன் அவசியம் ஆகின்றான். அரசனின்றி நாடு இயங்காது.

அக்காலம் தொட்டு இன்று வரை நாடு ஒன்றில் அரசன் என்பவன் புகழுக்குரியவனாக காணப்படுகின்றான்.

அரசன் என்பவன் பாதுகாப்பான மாளிகைகளில் வாழ்வதோடு உயரக ஆடை அணிகலன்களை அணிபவனாக காணப்படுவதோடு மக்களை காப்பவனாகவும் காணப்படுகின்றான்.

அவ்வகையில் சேரன், சோழன், பாண்டியன் போன்ற மன்னர்கள் இன்று வரை அவர்களின் ஆட்சியினால் சிறப்பான மன்னர்களாக போற்றப்படுகின்றனர். இவ்வாறான மன்னர் என்ற பெயருக்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன.

அரசன் வேறு பெயர்கள்

  1. சக்கரவர்த்தி
  2. மாகாராஜா
  3. ராஜா
  4. மன்னன்
  5. கோ
  6. வாசன்
  7. விசுபதி
  8. இறை
  9. பதி
  10. தலைவன்
  11. அரையன்
  12. வேந்தன்
  13. மன்னவன்
  14. கொற்றவன்
  15. கோன்
  16. காவலன்

அரசன் பற்றிய சில திருக்குறள்கள்

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. – திருவள்ளுவர்

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். – திருவள்ளுவர்

அரசன் பற்றிய பழமொழிகள்

  • அரசன் அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்.
  • அரசனில்லா நாடு நரகம்.
  • அரசன் வீழ்ந்தால் படையில்லை.

தற்காலத்தில் ஒரு அரசுக்கு ஒரு அரசர் காணப்பட்டாலும் ஆரம்ப காலங்களில் ஒரு அரசில் பல அரசர்கள் காணப்பட்டனர். அவ்வகையில் அரசர்கள் வகைகளாவன

  • முல்லைத்தலைவன் பெயர்கள் – குறும்பொறைநாடன்,அண்ணல், தோன்றல்.
  • குறிஞ்சித்தலைவன் பெயர்கள் – மலையன், வெற்பன், சிலம்பன், பொருப்பன், கானகநாடன்.
  • மருதத்தலைவன் பெயர்கள் – ஊரன், மகிழ்நன், கிழவன்.
  • நெய்தல் தலைவன் பெயர்கள் – கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம்புலம்பன்.
  • நாட்டுத்தலைவர் – குரிசில், வேள், குறும்பன், மன்னன், கோன், கோ, வேந்தன்.

Read more: தூதுவளை பயன்கள்

பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது எப்படி