ஆரம்ப காலங்களில் மக்கள் போர் செய்வதற்கும் விலங்குகளை வேட்டையாடவும் பல ஆயுதங்களை பயன்படுத்தினர். அவ்வகையில் பயன்படுத்திய ஆயுதங்களில் அம்பும் ஒன்றாகும்.
இது வில்லில் வைத்து இலக்கு ஒன்றினை நோக்கி எய்யவே பயன்படுத்தப்பட்டது. வில் இன்றி அம்பு இல்லை. அம்பு இன்றி வில் இல்லை.
அம்பு என்றால் என்ன என்று நோக்கும் போது அம்பு என்பது வில்லின் நானில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஆயுதம் அம்பு எனலாம்.
அதன் கூர்மை தன்மையினைக் கொண்டே ஆரம்ப காலக்கவிகள் பார்வையின் தன்மையை அம்புகளுக்கு உவமித்து உள்ளனர். உதாரணமாக கம்பராமாயணத்தில் இராமனின் பார்வை அம்புகள் சீதையின் தனங்களில் தைத்தன என்று இராமனின் பார்வை வர்ணிக்கப்படுவதன் மூலம் அறியலாம்.
ஆரம்ப காலத்தில் அம்புகள் மரத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்டன. முன்னைய காலங்களில் அம்பு எய்தல் ஒரு கலையாக போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
அம்பெய்யும் கலையில் சிறப்பு உடையவராக அர்ச்சுனன், கர்ணன் போன்றோர் சிறந்து விளங்கினர். இவ்வாறு சிறப்புடைய அம்புக்கு தமிழில் பல வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
அம்பு வேறு பெயர்கள்
- பாணம்
- கணை
- சரம்
- அஸ்த்திரம்
- வாளி
போன்ற பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Read more: அரக்கன் வேறு பெயர்கள்