அணு என்றால் என்ன

anu enral enna in tamil

இவ்வுலகில் எந்தவொரு பொருளை எடுத்தாலும் அது அணுக்களால் ஆனதுதான். அணுவானது எலக்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களானது ஆகும். ஒவ்வொரு அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும் அதோடு கட்டுண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மின்னிகளும் அமைந்துள்ளன.

அணு என்றால் என்ன

அணு என்பது ஒரு பொருள் உருவாகக் காரணமாய் இருக்கும் மூலக்கூறு எனலாம்.

Atom என்பதன் பொருள் பிரிக்க முடியாத துகள்கள் என்பதாகும். மேலும் அணு என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறாகும்.

அணுக்களை எவ்வாறு கண்டுபிடித்தனர்

கி.மு 460 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிறந்தவர் டெமாக்ரடிக் (Democritus) இவர் ஏதேனும் ஒரு பொருளை வெட்டினாலோ அல்லது உடைத்தாலோ அது மேலும் சிறிய பொருளாக மாறும் என்றும் அதனைத் தொடர்ந்து உடைத்தால், கடைசிவரை சிறிதாகவே உடைந்து கொண்டு போகும் என்றும் ஆரம்பத்தில் நினைத்தார்.

டெமாக்ரடிக்சும் அவருடன் சிலரும் இணைந்து எல்லாப் பொருட்களும் ஓரளவிற்கு தான் சிறிதாக உடையும் என்றும் அதற்கு மேல் உடையாது என்றும் கூறினர். அந்த சிறிய பொருளுக்கு ஆட்டோபஸ் (Atomos) எனப் பெயர் வைத்தனர். இதற்கு அவர்களிடம் ஆதாரமில்லை ஓர் கணிப்பாகவே கூறினர்.

இக்காலப்பகுதியில் பின்னர் பல இடங்களில் Chemistry தொடர்பாகப் பல ஆராய்ச்சிகள் இடம் பெற்றன. எல்லா பொருட்களும் வேறு பல பொருட்களின் கலப்பு என கண்டுபிடித்தனர்.

கி.பி 721 இல் அதில் முக்கிய பங்கு வகித்தவர் அபுமுசா ஐபீர் இபு இய்யன் (Abu Musa) என்பவராவார்.

இவரைத் தொடர்ந்து கி.பி 17ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அண்டோன் லிவோய்சியர் (Antoine Lavoiser) என்ற ஆராய்ச்சியாளரும் அவருடைய செயலாளராக இருந்த அவரது மனைவியான மேரி ஆன் பால்ஸே லவோய்சியா (Marie Anne Paulze Lavoiser) என்பவரும் ஏற்கனவே பிரித்தெடுத்த சில பொருட்களை மேலும் பிரிக்க முடியும் என்று கண்டுபிடித்தனர்.

எடுத்துக்காட்டாக நீரை ஆவியாக மாற்றலாம். அந்த ஆவியை ஆக்சிஜன் ஆகவும், ஹைட்ரஜனாகவும் மேலும் பிரிக்கலாம். ஆனால் ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரிக்க முடியவில்லை.

இவ்வாறு பிரிக்க முடியாத பொருட்களுக்கு தனிமங்கள் (Elements) என பெயர் வைத்தனர் இதனைத் தொடர்ந்து பல தனிமங்களை உலகம் முழுவதும் கண்டுபிடித்தனர். இதுவரைக்கும் 118 தனிமங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

18 ஆம் நூற்றாண்டில் ஜான் டால்டன் (John Dalton) அதுவரை மேற்கொண்ட அணுக்கள் தொடர்பான பல ஆராய்ச்சிகளை படித்தார். அதிலிருந்து அவர் 1803 ஆம் ஆண்டு அணுக்கள் எல்லாம் மிகச் சிறிய துகள்கள் கொண்டவை எனக் கணித்தார்.

அதன்பின் அதற்கு பழைய Atomos என்ற பெயரை மாற்றி Atom எனப் பெயர் வைத்தார். ஆனால் அது எவ்வளவு சிறிதாக இருக்கும் என்று அவர் கணிக்கவில்லை.

பின் 1905 ஆம் ஆண்டு ஆல்பட்ஐன்ஸ்டீன் அணு பற்றிய சூத்திரத்தைக் கண்டுபிடித்தார். 2வருடங்கள் கழித்து ஜான் பாப்டிஸ்ட் பெரின் (Jean Baptiste Perrin) என்பவர் ஆல்பட்ஐன்ஸ்டீன் சூத்திரத்தை வைத்து அணு என்ற சிறிய பொருள் இருப்பது உண்மை என்று உறுதிப்படுத்தினார்.

Read more: ஒளிச்சேர்க்கை என்றால் என்ன

கருந்துளை என்றால் என்ன