தமிழ் இலக்கணத்தில் முக்கியமான இலக்கணப் பகுதியாக காணப்படுவது வேற்றுமை ஆகும். நாம் ஒரு வசனத்தை எழுதுகின்ற போது அதில் ஏதும் பிழை ஏற்படாமல் இருப்பதற்கும், பொருள் மாறுபடாமல் அல்லது குழப்பமடையாமல் இருப்பதற்கும் வேற்றுமை பயன்படுகிறது.
Table of Contents
வேற்றுமை உருபு என்றால் என்ன
வேற்றுமை என்பது வேறுபாடு ஆகும். பெயர்கள் தாம் ஏற்கும் வேற்றுமை உருபுகளுக்கு ஏற்ப பொருள் வேறுபடுவது வேற்றுமை எனப்படும். அதாவது ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை மாற்றி காட்டுவது வேற்றுமை ஆகும்.
வேற்றுமை உருபுகள் யாவை
வேற்றுமை உருபுகள், ஒரு பெயரை சார்ந்தே வரும் இடைச்சொற்கள் ஆகும். அவை தனித்து வருவதில்லை.
- ஐ
- ஆல்
- ஆன்
- கண்
- கு
- ஒ
- ஓடு
- உடன்
- இன்
- இல்
- அது
வேற்றுமை வகைகள்
தமிழில் எட்டு வகையான வேற்றுமைகள் காணப்படுகின்றன. அவையாவன,
- முதலாம் வேற்றுமை (எழுவாய்)
- இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள்)
- மூன்றாம் வேற்றுமை (கருவி)
- நான்காம் வேற்றுமை (கொடை)
- ஐந்தாம் வேற்றுமை (நீங்கல்)
- ஆறாம் வேற்றுமை (உடைமை)
- ஏழாம் வேற்றுமை (இடம்)
- எட்டாம் வேற்றுமை (விளி)
1. முதலாம் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)
முதலாம் வேற்றுமைக்கு உருபுகள் ஏதுமில்லை. அதாவது உருபுகள் ஏதும் இன்றி எழுவாய் தனித்து நின்று பொருள் தருவது முதலாம் வேற்றுமை எனப்படும். இது எழுவாய் வேற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது.
முதலாம் வேற்றுமை உதாரணம்:
- அம்மா சமைத்தார்.
- பசு புல் மேய்ந்தது.
2. இரண்டாம் வேற்றுமை (செயப்படுபொருள்)
பெயர்ச்சொல்லை செயப்படுபொருளாக மாற்றிக் காட்டுவது இரண்டாம் வேற்றுமை ஆகும். இதன் உருபு “ஐ” என்பதாகும்.
இரண்டாம் வேற்றுமை உதாரணம்:
- கபிலர் பாரியைப் பாடினார்.
இரண்டாம் வேற்றுமை உருபானது ஆறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அவையாவன,
- ஆக்கல் பொருள்
- அழித்தல் பொருள்
- அடைதல் பொருள்
- நீத்தல் பொருள்
- ஒத்தல் பொருள்
- உடமைப் பொருள்
ஆக்கல் பொருள்
ஒரு பொருளை உருவாக்குதல் பொருளில் அதாவது ஆக்கல் பொருளில் இரண்டாம் வேற்றுமை உருபு பயன்படுத்தப்படுகிறது.
ஆக்கல் பொருள் உதாரணம்:
- குயவன் பானையை செய்தான்.
அழித்தல் பொருள்
ஒரு பொருளை அழித்தல் பொருளில் இரண்டாம் வேற்றுமை உருபு பயன்படுத்தப்படுகிறது.
அழித்தல் பொருள் உதாரணம்:
- கந்தன் மரத்தை வெட்டினான்.
அடைதல் பொருள்
ஒன்றை அடைதல் பொருளிலும் இரண்டாம் வேற்றுமை உருபு பயன்படுத்தப்படுகிறது.
அடைதல் பொருள் உதாரணம்:
- கந்தன் மதுரையை அடைந்தான்.
நீத்தல் பொருள்
ஒன்றை விட்டு நீங்குதல் அல்லது விலகுதல் என்பவற்றை கூறும் நீத்தல் பொருளிலும் இரண்டாம் வேற்றுமை உருபு பயன்படுத்தப்படுகிறது.
நீத்தல் பொருள் உதாரணம்:
- கந்தன் இல்லறத்தை துறந்தான்.
ஒத்தல் பொருள்
ஒரு பொருளை அல்லது ஒருவரை இன்னொன்றுடன் ஒப்பிடும் முறையான ஒத்தல் பொருளிலும் இரண்டாம் வேற்றுமை உருபு பயன்படுத்தப்படுகிறது.
ஒத்தல் பொருள் உதாரணம்:
- கந்தன் அவனது தந்தையை போன்றவன்.
உடமைப் பொருள்
உடமைப் பொருளிலும் இரண்டாம் வேற்றுமை உருபு பயன்படுத்தப்படுகிறது.
உடமைப் பொருள் உதாரணம்:
- கண்ணன் பெரும்புகழைக் கொண்டவன்.
3. மூன்றாம் வேற்றுமை (கருவி)
மூன்றாம் வேற்றுமை ஆனது “ஆல், ஆன், ஒடு, ஓடு” எனும் உருபுகளை கொண்டுள்ளது. இது கருவிப்பொருள், கருத்தாப் பொருள், உடன்நிகழ்ச்சிப் பொருள் எனும் மூன்று பொருட்களின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
1. கருவிப்பொருள்
கருவிப் பொருளானது முதல்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
முதற்கருவி
முதற்கருவி உதாரணம்:
- மரத்தால் சிலை செய்தான்.(ஆல்)
துணைக்கருவி
துணைக்கருவி உதாரணம்:
- உளியால் சிலை செய்தான்.(ஆல்)
2. கருத்தாப் பொருள்
கருத்தா பொருள் என்பது செய்பவரை குறிப்பதாக அமைந்துள்ளது. இது இரண்டு வகைப்படும்.
ஏவுதல் கருத்தா
ஏவுதல் கருத்தா உதாரணம்:
- கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.(ஆல்)
இயற்றுதல் கருத்தா
இயற்றுதல் கருத்தா உதாரணம்:
- திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப்பட்டது. (ஆல்)
3. உடன்நிகழ்ச்சிப் பொருள்
உடன்நிகழ்ச்சிப் பொருள் உதாரணம்:
- தாயொடு மகள் வந்தாள். (ஒடு)
- கண்ணனோடு அர்ஜுனன் வந்தான். (ஓடு)
4. நான்காம் வேற்றுமை (கொடை)
நான்காம் வேற்றுமை உருபு “கு” ஆகும். இந்நான்காம் வேற்றுமையானது பின்வரும் பொருளிலும் கையாளப்படுகிறது.
கொடை
உதாரணம்:
- மணி கண்ணனுக்கு பரிசு கொடுத்தான்.
பகை
உதாரணம்:
- துரிதஉணவு மனிதனுக்கு பகை
நட்பு
உதாரணம்:
- அர்ஜுனனுக்கு கண்ணன் நண்பன்.
தகுதி
உதாரணம்:
- கவிதைக்கு அழகு கற்பனை.
அதுவாதல்
உதாரணம்:
- தேநீர்க்கு பால் வாங்கினான்.
பொருட்டு
உதாரணம்:
- விடுதலைக்குப் பாடுபட்டனர்.
முறை
உதாரணம்:
- கந்தனுக்கு தம்பி பாலு.
எல்லை
உதாரணம்:
- மதுரைக்குக் கிழக்கே கீழடி உள்ளது.
5. ஐந்தாம் வேற்றுமை (நீங்கல்)
ஐந்தாம் வேற்றுமை உருபுகளாக “ இல், இன்” காணப்படுகின்றது. ஐந்தாம் வேற்றுமையானது பல்வேறு பொருள்களில் அமைகிறது. அவையாவன,
நீக்கல்
உதாரணம்:
- தலையின் இழிந்த மயிர்.
ஒப்பு
உதாரணம்:
- பாம்பின் நிறம் ஒரு வகை.
எல்லை
உதாரணம்:
- ஊரின் கிழக்கே சத்திரம் அல்லது.
ஏது
உதாரணம்:
- சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்.
6. ஆறாம் வேற்றுமை (உடைமை)
ஆறாம் வேற்றுமை உருபுகளாக “அது, ஆது, அ” என்பவை காணப்படுகின்றன. இந்த ஆறாம் வேற்றுமை உரிமைப் பொருளில் வருகிறது.
ஆறாம் வேற்றுமை உதாரணம்:
- கண்ணனது வீடு. (அது)
7. ஏழாம் வேற்றுமை (இடம்)
காலா வேற்றுமை உருபாக “கண்” என்பது காணப்படுகிறது. இது எமது உடலில் காணப்படும் கண் எனும் உறுப்பை குறைக்காது. இது பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட வேற்றுமை உருபாக காணப்படுகிறது.
ஏழாம் வேற்றுமை உதாரணம்:
- எங்கள் ஊரின் கண் மழை பெய்தது.
- இரவின் கண் மழை பெய்தது.
8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
எட்டாம் வேற்றுமையானது படர்க்கை பெயரை முன்னிலை பேராக மாற்றும் வேற்றுமை ஆகும். இதற்கு உருபுகள் இல்லை. இது ஒரு பெயரை விளித்துக் கூற பயன்படுத்தப்படுகிறது
எட்டாம் வேற்றுமை உதாரணம்:
- கந்தன் —> கந்தா
Read more: மனித உரிமைகள் என்றால் என்ன