இந்த பதிவில் மருத்துவ குணங்கள் நிறைந்த களைச் செடிகளில் ஒன்றான “நொச்சி இலை பயன்கள்” பற்றி காணலாம்.
நம் முன்னோர்கள் நோய் தீர்க்கும் நொச்சி இலை என்று சொல்வார்கள். அந்தளவு மருத்துவக் குணம் கொண்டதாக இருக்கின்றது. இது மலைப்பகுதியில் வளரும் மூலிகையாகும்.
இவை தோட்டப்பகுதியிலும் வயல்வெளிகளிலும் இயல்பாக வளரக் கூடும். அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி போன்ற பலபெயர்களால் அழைக்கப்படுகிறது.
கருநொச்சி, சித்தமருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறன. நொச்சியில் குறிப்பிடத்தக்கவையாக வெண் நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி போன்றன காணப்படுகின்றன.
இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என முழுத்தாவரமுமே மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.
நொச்சி இலை பயன்கள் (Nochi Leaves Benefits In Tamil)
1. கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு உடலில் உண்டாகும் வலியை குறைக்க நொச்சி இலை உதவுகிறது. நீரில் இரண்டு கைப்பிடி நொச்சி இலைகளை சேர்த்து இலேசாக கொதிக்கவிட்டு வெதுவெதுப்பானதும் அந்த நீரில் குளித்துவர உடல் வலி தீரும்.
2. உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் கலந்து குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
3. ஜலதோஷம், மூக்கடைப்பு போன்ற முக்கியமாக சைனஸ் தலைவலிப் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. நொச்சி இலையுடன் சிறிதளவு சுக்கு சேர்த்து அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மூக்கடைப்பு நீங்க நொச்சி இலையை கசக்கி அதன் சாறை சுத்தமான வெள்ளைத் துணியில் போட்டு அதை மூக்கில் முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு நீங்கும்.
4. இரைப்பு நோய் இருப்பவர்கள் நொச்சி இலையுடன் மிளகு பூண்டு, இலவங்கம் சேர்த்து அப்படியே சாப்பிட்டாலோ அல்லது கஷாயமாக்கி குடித்தாலோ இரைப்பு நோய் குறைவடையும்.
5. தலையில் நீர் கோர்வை, மண்டையில் நீர் கோர்வை, தலைபாரம் பிரச்சனை போன்றவற்றைக் குணப்படுத்தும். நொச்சி இலை கொண்டு ஆவி பிடிப்பதன் மூலம் மண்டையோட்டில் இருக்கும் நீர் முழுவதும் வியர்வையாகி வெளியேறி சுவாச பாதை சுத்தமாகும்.
6. குளிர்காய்ச்சல் இருந்தால் நொச்சி இலை கொண்டு வேது பிடிப்பதன் மூலம் காய்ச்சலின் தீவிரம் மெல்ல மெல்ல தணியும்.
7. தூக்கம் நன்றாக வர நொச்சியிலை பயன்படுகிறது. நொச்சி இலையை துணியில் அடைத்து அதை தலையணையாக பயன்படுத்தினால் தூக்கம் நன்றாக வரும். அத்தோடு கழுத்துவலி, கழுத்தில் நெறிகட்டுதல், நரம்பு கோளாறுகளால் கழுத்துவலி போன்றனவும் இத் தலையணை மருத்துவத்தால் குணமாகும்.
8. மூட்டுவலியைக் குணப்படுத்தும். மூட்டுவலி இருப்பவர்கள் நொச்சி இலைச்சாறை மூட்டுகளின் மீது தடவி வந்தாலும் வலி குறையும்.
9. புண்களை ஆற்றும். புண்களில் நொச்சி இலைச்சாற்றை தடவி வந்தால் சீழ் வரும் நிலையில் இருக்கும் புண்களையும் ஆற்றும்.
10. கொசுக்களை விரட்டப் பயன்படுகிறது.
11. கீல் வாதம், முக வாதம் போன்ற கடுமையான வாத நோய்கள் மண்டைக் குடைச்சல் முதலியவற்றிற்குச் செய்யப்படும் மருந்துகளில் கருநொச்சி சிறப்பாகச் சேர்க்கப்படுகின்றது. நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பை மேனி, ஆடா தோடை, நாயுருவி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து, முக்கால் அளவு நீருள்ள வாய் அகன்ற மண் கலத்தில் கொதிக்க வைத்துச் சூடு செய்த செங்கல்லைப் போட்டு வேது பிடிக்க வாதம் அனைத்தும் குணமாகும். வாரத்துக்கு 2 முறை செய்யலாம்.கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குணமாக்கும்.
12. தானியங்களைப் பாதுகாக்கப் பயன்படுகின்றது. தானிய வகைகள், பருப்பு வகைகள், அரிசி இவைகளை சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் இந்த நொச்சி இலைகளை போட்டு வைத்தால் புழு, வண்டு இவைகள் வராமல் இருக்கும்.
You May Also Like : |
---|
சதகுப்பை மருத்துவ குணங்கள் |
வேப்ப எண்ணெய் பயன்கள் |