தமிழுக்கு அமுதென்று பெயர் கட்டுரை

tamilukkum amuthendru per katturai in tamil

இந்த பதிவில் “தமிழுக்கு அமுதென்று பெயர் கட்டுரை” பதிவை காணலாம்.

“கனியிடை ஏறிய சுளையும் முற்றல் கழையிடை ஏறிய சாறும் இனியன என்பேன் எனினும் தமிழை என்னுயிர் என்பேன்” என்கிறார் பாரதிதாசன்.

தமிழுக்கு அமுதென்று பெயர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழின் பெருமைகள்
  • அறிஞர்கள் கருத்து
  • இனிமை தரும் இலக்கியங்கள்
  • தமிழ்ப்பணி
  • முடிவுரை

முன்னுரை

“தமிழுக்கு அமுதென்று பெயர் இன்பத்தமிழ் எங்கள் உயிரிற்கு நேர்” என்று தமிழிற்கும் நமக்குமான நெருக்கமான பந்தத்தை பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் மிகவும் அழகாக விபரிக்கின்றார்.

நமது தாய்மொழியான தமிழானது நமக்கு எமது வாழ்வியலாகவும், நமது பெருமையாகவும், அடையாளமுமாக திகழ்வதனால் தான் உலக மொழிகளில் தனித்துவம் பெற்ற மொழியாக எக்காலத்திலும் திகழ்கின்றது.

தமிழின் இனிமையும், அதன் செழுமையும், அது தன்னகத்தே கொண்டிருக்கும் முத்தமிழ் கலை படைப்புக்களின் வாயிலாக உலகம் அறிந்த ஒன்றாகும்.

தமிழின் பெருமைகள்

உலகிலே உள்ள செம்மொழிகளில் ஒன்றான நமது தாய்மொழியானது. பல்வேறான தனி சிறப்புக்களை கொண்டுகாணப்படுகின்றது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியானது தோன்றி எழுதவும் பேசவும் பட்டது என்பதற்கு வரலாற்று சான்றுகள் இன்றும் உள்ளன.

கல்வெட்டுக்களும் பண்டைய இலக்கியங்களும் தமிழ் மொழியின் தனித்துவத்தன்மையினை உலகுக்கு எடுத்து காட்டுகிறது.

இலக்கண சிறப்பு, கவிதை, கட்டுரை, நாவல், செய்யுள், சிறுகதைகள் என பலவகையான இலக்கிய வடிவங்களை கொண்டு காலத்துக்கு காலம் ஏராளமான இலக்கிய படைப்புக்கள் தமிழின் பெருமையினை இவ்வுலகிற்கு எடுத்து காட்டுகின்றன.

அறிஞர்களின் கருத்து

காலத்துக்கு காலம் தமிழில் படைப்புகளுக்கோ படைப்பாளிகளுக்கோ பஞ்சமில்லை எண்ணற்ற படைப்பாளிகள் தோன்றி தமிழன்னைக்கு அழகு சேர்க்கும் பல படைப்புக்களை செய்திருக்கிறார்கள்.

அந்தவகையில் வள்ளுவர், கம்பர், பாரதியார் மற்றும் சங்கப்புலவர்கள் என எண்ணற்ற படைப்பாளிகள் தமிழை தம் இன்னுயராக பாவித்து பாடிய பாடல்கள் தமிழில் உள்ளன.

“யாமறிந்த மொழிகளில் தமிழ் போல இனிதாவதொன்றும் காணோம்” என்று போற்றி பாடினார் பாரதியார். தமிழர்களை பொறுத்தவரை தமது மொழியை தம் தாயாக பாவிக்கின்ற விதம் அழகானது.

இனிமை தரும் இலக்கியங்கள்

“கனியிடை ஏறிய சுளையும் முற்றல் கழையிடை ஏறிய சாறும் இனியன என்பேன் எனினும் தமிழை என்னுயிர் என்பேன்” என்கிறார் பாரதிதாசன்.

அந்தவகையில் உலகில் இனியனவாக எத்தனை விடயங்கள் இருப்பினும் அவை தமிழின் இனிமைக்கு இணையாக மாட்டாது என்பதுவே இதன் கருத்தாகும்.

தமிழில் உள்ள சங்கப்பாடல்கள், திருக்குறள் மற்றும் பக்தி இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள், பாரதிதாசனின் கவிதைகள் என பலவகையான இலக்கிய சுவையுள்ள இலக்கியங்கள் பல தமிழில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்ப்பணி

இத்தகைய பெருமையுள்ள நமது மொழியின் பெருமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதனை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் நாம் அதனை சொல்லி கொடுக்க வேண்டும்.

இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு திறன், மொழிப்பற்று போன்ற விடயங்கள் வெகுவாக குறைவடைந்து விட்டன. நமது முன்னோர்கள் சிறந்த மொழிப்பற்றோடு எண்ணற்ற தமிழ் படைப்புக்களை செய்தனர்.

இதனை பின்பற்றி நாமும் தமிழ்ப்பணி செய்ய கூடியவர்களாக மாற வேண்டும். இதன் மூலம் நமது தாய் மொழியினை பாதுகாத்துகொள்ள முடியும்.

முடிவுரை

இன்றைய குழந்தைகளிடம் இலக்கிய வாசிப்பு, மொழிப்பற்று மற்றும் தாய்மொழி பற்றிய புரிந்துணர்வு போன்றவை குறைவதற்கான காரணமாக தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி அவர்களது நேரத்தை அதிகம் விரையமாக்குவதனாலாகும்.

இதனை தடுத்து அவர்களுக்கும் தமிழ் மீது பெருமையினையும், பற்றினையும் உருவாக்கி தமிழின் இனிமையினை எம்மை போல் பிறரையும் உணர செய்ய உழைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

You May Also Like :
மொழியும் பண்பாடும் கட்டுரை
செம்மொழியான தமிழ் மொழியாம் கட்டுரை