வேதியியல் பார்வையில் ஒரே வகையான துகள்களைப் பெற்றுள்ளவை தூய்மையான பொருட்கள் எனப்படும். எடுத்துக்காட்டு தனிமங்கள், சேர்மங்கள் போன்றவையாகும். பூமியிலுள்ள அனைத்துப் பொருட்களும் தனிமங்களாலானவை ஆகும்.
அதாவது மரஞ்செடி, கொடிகள், பாறைகள், விலங்குகள், பறவைகள், வாகனங்கள் மனித உடல்கள், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றுக்கூட ஆக்சிஐன், நைட்ரஐன் மற்றும் ஆர்கான் போன்ற பல தனிமங்களாலானது.
நமது அண்டத்தில் ஹைட்ரஐன், ஹீலியம், ஆக்ஸியன், கரிமம், நியான், இரும்பு, நைட்ரஐன், சிலிக்கான், மக்னீசியம், கந்தகம் போன்ற தனிமங்கள் மிகுதியாக உள்ளன.
ஒவ்வொரு தனிமத்திற்கும் அதன் அணு எண், அடர்த்தி, உருகுநிலை மற்றும் கொதிநிலை, அயனி ஆற்றல் ஆகிய கூறுகள் மாறுபடும்.
ஒரு தனிமத்தின் அணு எண் அதன் புரொட்டான்களின் எண்ணிக்கையை வைத்து வரையறுக்கப்படுகின்றது.
பெரும்பாலான தனிமங்கள் திட நிலையிலேயே இருக்கின்றன. எனினும் தனிமங்கள் மூன்று நிலையில் உள்ளன. அதாவது திண்மம், திரவம், வாயு என்பவையே அவை மூன்றுமாகும்.
Table of Contents
தனிமம் என்றால் என்ன
மேலும் எளிய பொருட்களாகப் பகுக்க முடியாத பொருட்கள் தனிமங்கள் எனப்படும். தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரே வகையான அணுக்களால் ஆனவை ஆகும்.
மேலும் தனிமம் என்பதன் பொருள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புரொட்டன்களைக் கொண்டவை என பொருள் கொள்ளப்படும்.
தனிம வரிசை அட்டவணை
அணு எண் | பெயர் | குறி எழுத்து |
---|---|---|
1 | ஐதரசன் | H |
2 | ஈலியம் | He |
3 | லித்தியம் | Li |
4 | பெரிலியம் | Be |
5 | போரான் | B |
6 | கரிமம் | C |
7 | நைட்ரசன் | N |
8 | ஒட்சிசன் | O |
9 | ஃவுளோரின் | F |
10 | நியான் | Ne |
11 | சோடியம் | Na |
12 | மக்னீசியம் | Mg |
13 | அலுமினியம் | Al |
14 | சிலிக்கான் | Si |
15 | பொசுபரசு | P |
16 | சல்பர் | S |
17 | குளோரின் | Cl |
18 | ஆர்கான் | Ar |
19 | பொட்டாசியம் | K |
20 | கால்சியம் | Ca |
21 | ஸ்காண்டியம் | Sc |
22 | டைட்டேனியம் | Ti |
23 | வனேடியம் | V |
24 | குரோமியம் | Cr |
25 | மாங்கனீசு | Mn |
26 | இரும்பு | Fe |
27 | கோபால்ட் | Co |
28 | நிக்கல் | Ni |
29 | செப்பு | Cu |
30 | துத்தநாகம் | Zn |
31 | காலியம் | Ga |
32 | செர்மானியம் | Ge |
33 | ஆர்சனிக் | As |
34 | செலீனியம் | Se |
35 | புரோமின் | Br |
36 | கிருப்டான் | Kr |
37 | ருபீடியம் | Rb |
38 | ஸ்டிரான்சியம் | Sr |
39 | யிற்றியம் | Y |
40 | சிர்க்கோனியம் | Zr |
41 | நையோபியம் | Nb |
42 | மாலிப்டினம் | Mo |
43 | டெக்னேட்டியம் | Tc |
44 | ருத்தேனியம் | Ru |
45 | ரோடியம் | Rh |
46 | பல்லேடியம் | Pd |
47 | வெள்ளி | Ag |
48 | காட்மியம் | Cd |
49 | இண்டியம் | In |
50 | வெள்ளீயம் | Sn |
51 | ஆண்ட்டிமனி | Sb |
52 | டெலூரியம் | Te |
53 | அயோடின் | I |
54 | செனான் | Xe |
55 | சீசியம் | Cs |
56 | பேரியம் | Ba |
57 | லாந்த்தனம் | La |
58 | சீரியம் | Ce |
59 | பிரசியோடைமியம் | Pr |
60 | நியோடைமியம் | Nd |
61 | புரோமித்தியம் | Pm |
62 | சமாரியம் | Sm |
63 | யூரோப்பியம் | Eu |
64 | கடோலினியம் | Gd |
65 | டெர்பியம் | Tb |
66 | டிஸ்ப்ரோசியம் | Dy |
67 | ஹோல்மியம் | Ho |
68 | எர்பியம் | Er |
69 | தூலியம் | Tm |
70 | இட்டெர்பியம் | Yb |
71 | லூட்டேடியம் | Lu |
72 | ஹாப்வினியம் | Hf |
73 | டாண்ட்டலம் | Ta |
74 | டங்க்ஸ்டன் | W |
75 | ரேனியம் | Re |
76 | ஆஸ்மியம் | Os |
77 | இரிடியம் | Ir |
78 | பிளாட்டினம் | Pt |
79 | தங்கம் | Au |
80 | பாதரசம் | Hg |
81 | தாலியம் | Tl |
82 | ஈயம் | Pb |
83 | பிஸ்மத் | Bi |
84 | பொலோனியம் | Po |
85 | அஸ்ட்டேட்டைன் | At |
86 | ரேடான் | Rn |
87 | பிரான்சியம் | Fr |
88 | ரேடியம் | Ra |
89 | ஆக்டினியம் | Ac |
90 | தோரியம் | Th |
91 | புரோட்டாக்டினியம் | Pa |
92 | யுரேனியம் | U |
93 | நெப்டூனியம் | Np |
94 | புளூட்டோனியம் | Pu |
95 | அமெரிசியம் | Am |
96 | கியூரியம் | Cm |
97 | பெர்க்கிலியம் | Bk |
98 | கலிபோர்னியம் | Cf |
99 | ஐன்ஸ்டினியம் | Es |
100 | ஃவெர்மியம் | Fm |
101 | மெண்டலீவியம்Mendelevium | Md |
102 | னொபிலியம் | No |
103 | லாரன்சியம் | Lr |
104 | ரதர்ஃவோர்டியம் | Rf |
105 | டூப்னியம் | Db |
106 | சீபோர்கியம் | Sg |
107 | போஃறியம் | Bh |
108 | ஹாஸ்சியம் | Hs |
109 | மைட்னேரியம் | Mt |
110 | டார்ம்ஸ்டாட்டியம் | Ds |
111 | ரோண்ட்டஜெனியம் | Rg |
112 | உனுன்பியம் | Uub |
113 | உனுன்றியம் | Uut |
114 | உனுன்குவாடியம் | Uuq |
115 | உனுன்பெண்ட்டியம் | Uup |
116 | உனுன்ஹெக்ஸியம் | Uuh |
117 | உனுன்செப்டியம் | Uus |
118 | உனுனாக்டியம் | Uuo |
தனிம வரிசை அட்டவணை தமிழில்
எண் | தமிழ் பெயர் | ஆங்கிலப் பெயர் |
1. | நீரியம் | Hydrogen |
2. | பரிதியம் | Helium |
3. | மென்னியம் | Lithium |
4. | வெளிரியம் | Beryllium |
5. | கார்மம் | Boron |
6. | கரிமம் | Carbon |
7. | தழைமம் | Nitrogen |
8. | உயிரகம் | Oxygen |
9. | வினைவியம் | Fluorine |
10. | ஒளிரியம் | Neon |
11. | உவர்மம் | Sodium |
12. | வெளிமம் | Magnesium |
13. | அளமியம் | Aluminium |
14. | மண்ணியம் | Silicon |
15. | எரியகம், தீமுறி | Phosphorus |
16. | கந்தகம் | Sulphur |
17. | பாசிகம் | Chlorine |
18. | இலியன் | Argon |
19. | வெடியம், சாம்பரம் | Potassium |
20. | சுண்ணம் | Calcium |
21. | காந்தியம் | Scandium |
22. | வெண்வெள்ளி | Titanium |
23. | பழீயம் | Vanadium |
24. | நீலிரும்பு | Chromium |
25. | செவ்விரும்பு, மங்கனம் | Manganese |
26. | இரும்பு | Iron |
27. | மென்வெள்ளி | Cobalt |
28. | வன்வெள்ளி | Nickel |
29. | செப்பு, செம்பு | Copper |
30. | துத்தநாகம், நாகம் | Zinc |
31. | மென்தங்கம் | Gallium |
32. | சாம்பலியம் | Germanium |
33. | பிறாக்காண்டம் | Arsenic |
34. | செங்கந்தகம் | Selenium |
35. | நெடியம் | Bromine |
36. | மறைவியம் | Krypton |
37. | அர்மிமம் | Rubidium |
38. | சிதறியம் | Strontium |
39. | திகழியம் | Yttrium |
40. | சிர்கோனியம் | Zirconium |
41. | களங்கன் | Niobium |
42. | போன்றீயம் | Molybdenum |
43. | பசகன் | Technetium |
44. | உருத்தீனம் | Ruthenium |
45. | அரத்தியம் | Rhodium |
46. | வெண்ணிரும்பு | Palladium |
47. | வெள்ளி | Silver |
48. | நீலீயம் | Cadmium |
49. | அவுரியம் | Indium |
50. | தகரம், வெள்ளீயம் | Tin |
51. | கருநிமிளை | Antimony |
52. | வெண்கந்தகம் | Tellurium |
53. | நைலம் | Iodine |
54. | அணுகன் | Xenon |
55. | சீரிலியம் | Caesium |
56. | பாரவியம் | Barium |
57. | மாய்மம் | Lanthanum |
58. | சீரியம் | Cerium |
59. | பிரசூதிமியம் | Praseodymium |
60. | இரட்டியம் | Neodymium |
61. | புரோமித்தியம் | Promethium |
62. | சுடர்மம் | Samarium |
63. | யூரோப்பியம் | Europium |
64. | காந்தவியம் | Gadolinium |
65. | தென்னிரும்பு | Terbium |
66. | திசுப்புரோசியம் | Dysprosium |
67. | ஒலுமியம் | Holmium |
68. | எல்லிரும்பு | Erbium |
69. | துலங்கியம் | Thulium |
70. | திகழ்வெள்ளீயம் | Ytterbium |
71. | மிளிரியம் | Lutetium |
72. | அபினியம் | Hafnium |
73. | தந்தாலம் | Tantalum |
74. | மெல்லிழையம் | Tungsten |
75. | இரேனியம் | Rhenium |
76. | கருநீலீயம் | Osmium |
77. | உறுதியம் | Iridium |
78. | வெண்தங்கம் | Platinum |
79. | தங்கம் | Gold |
80. | பாதரசம் | Mercury |
81. | தல்லியம் | Thallium |
82. | ஈயம் | Lead |
83. | நிமிளை | Bismuth |
84. | அனலியம் | Polonium |
85. | அஸ்தாதைன் | Astatine |
86. | ஆரகன் | Radon |
87. | வெடியிதள் | Francium |
88. | கருகன் | Radium |
89. | நீலகம் | Actinium |
90. | இடியம் | Thorium |
91. | பாகையம் | Protactinium |
92. | அடரியம் | Uranium |
93. | நெருப்பியம் | Neptunium |
94. | அயலாம் | Plutonium |
95. | அமரகம் | Americium |
96. | அகோரியம் | Curium |
97. | பெர்க்கிலியம் | Berkelium |
98. | கலிபோர்னியம் | Californium |
99. | ஐன்ஸ்டைனியம் | Einsteinium |
100. | வெளுகன் | Fermium |
101. | மெண்டலேவியம் | Mendelevium |
102. | நொபிலியம் | Nobelium |
103. | லோரென்சியம் | Lawrencium |
104. | ருதெர்போர்டியம் | Rutherfordium |
105. | டப்னியம் | Dubnium |
106. | சீபோர்ஜியம் | Seaborgium |
107. | போரியம் | Bohrium |
108. | ஹஸ்ஸியம் | Hassium |
109. | மீட்நேரியம் | Meitnerium |
110. | டாம்ஸ்ராட்டியம் | Darmstadtium |
111. | இரோயன்ட்கெனியம் | Roentgenium |
112. | கோப்பர்நீசியம் | Copernicium |
113. | நிஹோனியம் | Nihonium |
114. | பிளெரோவியம் | Flerovium |
115. | மாசுக்கோவியம் | Moscovium |
116. | லிவர்மோரியம் | Livermorium |
117. | தென்னிசீன் | Tennessine |
118. | ஒகனிசோன் | Oganesson |
Read more: கருந்துளை என்றால் என்ன