Table of Contents
சதாபிஷேகம் என்றால் என்ன
தம்பதியினரின் கணவருக்கு 80 வயது நிறைவடையும் போது செய்யப்படும் கோமம் மற்றும் கலாசாபிஷேகம் ஆகியவையே சதாபிஷகம் எனப்படுகின்றது.
சதாபிஷேகம் பற்றிய தகவல்கள்
சதாபிஷேக சாஸ்திர முறையை சௌனக மகரிஷியும், கோதாயன மகரிஷியின் வகுத்துள்ளனர்.
சௌனக மகரிஷி சதாபிஷேகம் செய்து கொள்பவர் தன் பேரனின் பிள்ளையை பார்ப்பதால் பாக்கியவானாகி தனது பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்க்கத்தை அடைவார் என்று கூறுகின்றார்.
நிறைய தர்ம காரியங்களையும், புண்ணியங்களையும் செய்தவனுக்கே நீண்ட காலம் வாழும் தன்மை ஏற்படும். அவ்வாறு தர்ம வழியில் நீண்ட காலம் வாழ்பவரைக் கொண்டாட வேண்டும் என்கின்றது சாஸ்திரம். 80 வயதைக் கடந்தவரை தெய்வம்சம் பொருந்தியவராக மதிக்க வேண்டும்.
கிருஷ்ண பரமாத்மா தினமும் ஆறு வகையான மனிதர்களை வணங்குவதாக கூறுகின்றார்.
- தினமும் அன்னதானம் வழங்குபவன்
- இளம் வயதிலேயே திருமணம் செய்து முக்காண்டு அக்கினகோத்திரம் தொடங்கி இல்லக் கடமையைச் செய்பவன்
- வேதத்தையும், சாத்திரங்களையும் கற்றுணர்ந்து அதன்படி தர்ம வழியில் வாழ்க்கை நடத்துபவன்
- ஆயிரம் பௌர்ணமி நிலவை தரிசனம் செய்பவன்
- மாதத்தில் வருகின்ற முக்கிய விரதங்களான அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, சதுர்த்தசி, அட்டமிகளில் விரதம் கடைப்பிடித்து முன்னோர்களையும் தேவர்களையும் வணங்குபவன்
- உத்தம பதிவிரதை
ஆகியோரை வணங்குவதாக கூறுகின்றார்.
சதாபிஷேகம் செய்து கொள்பவர்கள் பிறந்த தமிழ் மாதத்தில் அவர்களுடைய நட்சத்திரம் வரும் நாளில் செய்ய வேண்டும். 80 வயது நிறைவானவுடன் செய்யலாம். தன் பேரனுக்கு குழந்தை பிறந்து விட்டால் 80 வயது முடியும் முன்பே சதாபிஷேகம் செய்யலாம் என்கின்றார் வேதநாயக மகரிஷி.
மற்றொன்று 80 வயது 8 மாதங்கள் நிறைவானவுடன் செய்யலாம். 80 வயது 8 மாதங்கள் நிறைந்த ஒருவர் ஆயிரம் பிறை கண்டவர் என்கின்றது சாஸ்திரம். அதாவது ஆயிரம் மூன்றாம் பிறைகளை சந்தித்தவர் என்று அர்த்தமாகும்.
மூன்றாம் பிறைச் சந்திரனைத் தரிசிப்பதால் வியாதிகள் மனக்குழப்பங்கள் நீங்கும். அதை காண்பதனால் ஏற்படும் பலம் மிகவும் விஷேசத்தை அளிக்கும்.
ஆயிரம் மூன்றாம் பிறைகளை அவர்கள் பார்க்காவிட்டாலும் சந்திரனின் கிரகணங்கள் அவர்கள் மீது பட்டால் அவர்களுக்கு விசேஷத் தன்மை உண்டு.
சாஸ்திரப்படி சதாபிஷேகம் செய்யும் முறை
சதாபிஷேகத்திற்கு முதல் நாள் காப்பு கட்டுதல், புதிய வஸ்திரங்கள், புடவைகள் அணிந்து குலதெய்வம், வேதவிற்புணர்கள், இஷ்ட தெய்வங்களை வணங்கி இனுக்ஜை என்னும் அனுமதி பெறுதல் ஆகியவை நடைபெறும்.
விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், வருண பூஜை, நாத்திஸ்ராஸ்தம், கோதானம், நவக்கிரனப் ப்ரீத்தி ஆகியவை செய்வது முறையாகும்.
சதாபிஷகத்தின் போது முக்கியமாக பிரம்மாவை வழிபடுபவர். ஆயுள் என்பது நாம் தீர்மானிப்பது அல்ல. நாம் செய்யும் புண்ணிய காரியங்களைக் கொண்டு பிரம்மதேவர்களால் எழுதப்படுவது.
எனவே சதாபிஷேகத்தின் முக்கிய தேவதைகளாக பிரம்மா, கஜபதி, பரமேஸ்வரி, சதுர்முகர், கிரண்ய கிருபர் ஆகியோரை ஐந்து கலசங்களிலும்,
அஸ்ருதிக் பாலர்களான எட்டுப் பேரை தனித்தனி கலசங்களிலும் மொத்தமாக 13 கழகங்களில் ஆவணம் செய்து, தியானம், வேதமந்திரங்கள், மூல மந்திரங்களைச் சொல்லி 16 வகையான ராஜா உபசாரங்களைச் செய்து அர்ச்சனை செய்து பூஜிப்பார்கள்.
அக்கினி குண்டம் அமைத்து பிரம்ம மந்திரங்களுடன் கோமம் செய்து பாராயணம் செய்வார்கள். இந்த மந்திர அதிர்வுகள் எம் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மையுடையவை.
இதை சதாபிஷேகம் செய்து கொள்பவர் பக்தி ஸ்ருதியுடன் கேட்க வேண்டும். அப்படி கேட்பதால் அவர் மனதில் தென்பும் உற்சாகமும் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
Read more: அஷ்டமி என்றால் என்ன