குழந்தை தொழிலாளர் கட்டுரை

Child Labour Essay In Tamil

இந்த பதிவில் “குழந்தை தொழிலாளர் கட்டுரை” பதிவை காணலாம்.

அதிக வறுமை காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும் குழந்தைகள் தொழிலார்களாக மாறுகின்றார்கள்.

பல நாடுகளில் குழந்தைகளை வைத்து வேலை வாங்குவது நடைபெறுகின்றது. இது குழந்தைகளை அதிக மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன் அவர்களது எதிர்காலத்தையும் சிதைகின்றது.

  • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை
  • Child Labour Essay In Tamil
சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

குழந்தை தொழிலாளர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. குழந்தை தொழிலாளர்கள் எனப்படுபவர்கள்
  3. ஏன் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர்
  4. சமூக சீர்கேடுகளும் குழந்தை தொழிலாளர்களின் உருவாக்கமும்
  5. குழந்தைகளது எதிர்காலம் பாதிக்கப்படல்
  6. குழந்தை தொழலாளர்கள் அதிகம் காணப்படும் நாடுகள்
  7. முடிவுரை

முன்னுரை

ஒரு நாட்டினுடைய எதிர்காலம் அங்கு பிறந்து வளர்கின்ற குழந்தைகளில் தான் தங்கியுள்ளது. அந்த குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் அறிவுத்திறனுடன் வளர்வது தான் அந்த நாட்டுக்கு நன்மை அழிப்பதாகும்.

இதனையே அனைவரும் விரும்பி எதிர்பார்க்கின்றனர். ஆனால் பல ஆண்டு கால உலக வரலாற்றை எடுத்துபார்ப்போமாக இருந்தால் குழந்தைகளை சிறுவயதில் அவர்களது சுதந்திரத்தை பறித்து வேலைக்கு அமர்த்தும் செயலானது மிகவும் வேதனையழிப்பதாக உள்ளது.

“ காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா” என்று பாரதியார் குழந்தைகளின் வாழ்வை நான்கு வரி பாட்டில் பாடிவிடுகின்றார்.

இக்கட்டுரையில் குழந்தை தொழிலாளர்கள் என்பது பற்றியும் அவர்களது துன்பியல் நிறைந்த வாழ்க்கை பற்றியும் இக்கட்டுரை நோக்குகிறது.

குழந்தை தொழிலாளர்கள் எனப்படுபவர்கள்

குழந்தை தொழிலாளர்கள் எனப்படுபவர்கள் சிறுவயதிலேயே அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு வேலைகளில் அமர்த்தப்படும் குழந்தைகளை குறிக்கின்றது.

இவர்கள் உறவுகளின்றி அனாதையாகபட்டோ உரிமைகள் மறுக்கப்பட்டோ கல்வி சுதந்திரம் மறுக்கப்பட்டோ வறுமையின் நிமித்தம் வேலைகளில் அமர்த்தப்படும் சிறுவர்களை குறிக்கின்றது.

“விளையும் பயிரை முளையிலேயே தெரியும்” என்பது போல சிறுபராயத்தில் இவ்வாறு தொழிலாளர்களாக மாற்றப்படும் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலம் சூனியமாகி விடும்.

ஆகவே இவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அரசாங்கம் போன்றவற்றின் கடமையாகும்.

ஏன் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர்

உலகமெங்கிலும் பத்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை குழந்தை தொழிலாளியாக வஞ்சிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

வறுமையின் பெயரினாலும் தாய்,தந்தையர்களை இழந்தமையாலும் போதைக்கு அடிமையான குடும்பங்களில் இருந்தும் அவர்களுடைய பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் ஆயுதமாக குழந்தைகள் மாற்றப்படுகின்றர்.

பாதுகாப்பற்று அநாதாரவாக விடப்படும் குழந்தைகள் இவ்வாறு இலகுவாக சமூக விரோதிகளால் குழந்தை தொழிலாளியாக மாற்றப்படுகின்றனர்.

இந்தவருடத்தில் மாத்திரம் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இருபது வருடங்களில் இல்லாதவகையில் 20 கோடி குழந்தை தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர்.

ஜ.நா வின் தரவுகளின் படி இந்தியாவில் ஏழு முதல் 17 வயது வரையுள்ள குழந்தை தொழிலாளர்களுடைய எண்ணிக்கை ஒன்றரை கோடியாகும் இந்தியாவில் குழந்தைகள் சனத்தொகையில் 20 சதவீதமான குழந்தைகள் ஆபத்தான வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர்.

சமூக சீர்கேடுகளும் குழந்தை தொழிலாளர்களின் உருவாக்கமும்

ஒரு சமூகம் கல்வியில் பின் தங்கியதாக இருக்கின்ற போது அங்குள்ள மக்களது பகுத்தறிவும் பழக்கவழக்கங்களும் ஒழுக்க விழுமியங்களும் குறைவாகவே காணப்படுகின்றன.

அங்குள்ளவர்கள் அதிகம் போதைக்கு அடிமையாகவும் காணப்படுவர்.வறுமையை காரணம் காட்டி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள்

இதனால் அவர்கள் தமது குழந்தைகள் பற்றியோ அவர்களது எதிர்காலம் தொடர்பாக அதிகம் அலட்டி கொள்வதில்லை சிறுவர்களை வேலைகளுக்கு அனுப்புவதன் காரணமாக வேலைத்தளங்களில் உள்ள விசமிகளலால் குழந்தைகளையும் தவறான வழியில் இட்டுச் செல்ல இது வழிவகுக்கும்.

ஆக குழந்தைகளை சரியாக வளர்க்க அவர்களது குடும்ப பின்னணி மிக முக்கியமானதாக அமைகின்றது

குழந்தைகளது எதிர்காலம் பாதிக்கப்படல்

“பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்” என்பது போல் தவறான சூழலில் வளர்கின்ற குழந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் பாடசாலைகளுக்க செல்ல அவர்கள் அனுமதிக்காமையால் அவர்களது கல்வி பறிக்கப்படுகின்றது.

மகிழ்ச்சியான குழந்தை பராயத்தில் அவர்களை கொடுமைப்படுத்துவதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனிதர்களாக அவர்கள் மாற்றபடுவார்கள்.

போதைப்பாவனை பாலியல் கொடுமைகள் என அவர்களது வாழ்வே சீரழிந்துவிடுகின்றது. அவர்களை தவறான வழியில் கொண்டு செல்வதனால் அவர்கள் சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகின்றர்.

இதனால் சிறுவயதிலேயே சிறைக்கும் செல்கின்றனர்.இவ்வாறு அவர்களது வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியதாய் இருக்கும்.

குழந்தை தொழிலாளர்கள் அதிகம் காணப்படும் நாடுகள்

உலகளவில் அதிகம் வறுமை மிகுந்த நாடுகளே அதிகம் குழந்தைகளை தொழிலில் அமர்த்தும் ஆபத்தான நாடுகளாக இருக்கின்றன.

அந்தவகையில் “எரித்திரியா, சோமாலியா, கொங்கோ, மியன்மார், சூடான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிம்பாவே” போன்ற நாடுகளில் அதிகம் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

இது போன்ற நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் சபிக்கப்பட்டவர்கள் என்று எண்ண தோன்றுகின்றது.

முடிவுரை

வாழ்வில் மகிழச்சியான பருவம் என்பது குழந்தை பருவம் தான் இது யாராலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளை தந்திருக்கும்.

இந்த குழந்தை பருவம் அனைவருக்கும் மகிழ்வானதாக அமைந்து விடுவதில்லை இந்த குழந்தை தொழிலாளர்களது வாழ்வும் அவ்வாறானதே வலிகள் நிறைந்ததாகும்.

ஒரு நாட்டில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை அந்த அரசு பாதுகாக்க வேண்டும்.

அவர்களது உரிமைகள் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அப்போது தான் ஒரு வளமான நாட்டின் எதிர்காலம் உருவாகும்.

You May Also Like :

கல்வி வளர்ச்சி கட்டுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை