கும்பராசியினுடைய முக்கியமான இயல்பாக இவர்கள் வாரி வழங்க கூடிய வள்ளல்களாக இருப்பார்கள்.
பொதுவாக அறிவில் சிறந்தவர்களாகவும் கல்வி கேள்விகளில் வல்லவர்களாகவும் விளங்குவார்கள். இவர்கள் தன்னை நம்பி வந்தவர்களை காக்கும் மிக உயர்ந்த குணம் உடையவர்கள்.
சிறந்த நல்லெண்ணம் உடையவர்களான இவர்கள் நற்கருமங்களை ஆற்றுவார்கள். மிக சிறந்த உழைப்பாளிகளான இவர்கள் ஒரு வேலையை செய்வதற்கு முன்னர் மிகச்சிறந்த வகையில் திட்டமிட்டு அதனை செயற்படுத்துவார்கள்.
இவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதை மிகச்சிறப்பாக அதனை செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். இவர்கள் தங்களை தாமே கட்டுப்படுத்தி கொள்ளும் சுயகட்டுப்பாடு உடையவர்களாக விளங்குவார்கள்.
மேலும் தம்மை சுற்றி இருப்பவர்களையும் சீராக நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் இல்லாதுவிடின் அவர்களை புறக்கணித்து விலகிவிடுவார்கள்.
நியாயம், தர்மம் என்பவற்றை பிரித்தறிய கூடிய பகுத்தறிவாளர்களாக இவர்கள் விளங்குவார்கள். இவர்கள் எப்பொழுதும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள். வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் தமக்கு சரியான வழியில் பயணிப்பார்கள்.
தன்னை சுற்றி இருப்பவர்களும் திருப்தியாக வாழவேண்டும் என்று சிந்தித்து அவர்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். மனதிருப்திக்காக இவர்கள் வேலை செய்வார்கள் தமக்கு பிடித்த வேலையில் முழுமையாக ஈடுபடுவார்கள்.
அவ்வாறே இவர்கள் யாரையும் நம்பி இருக்க மாட்டார்கள் தமது சொந்த முயற்சியை நம்பியே முன்னேறுவார்கள் அதற்கேற்பவே திறமைசாலிகளாகவும் விளங்குவார்கள்.
கும்ப ராசிகாரர்கள் அதிகம் சுயமரியாதை உடையவர்களாக காணப்படுவார்கள். தன்னை நம்பியவர்களை கைவிடமாட்டார்கள் அதே சமயம் தன்னை மதிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். வாழ்வில் கொளரவம், கம்பீரம் என்று இவர்கள் தனித்துவமாக விளங்குவார்கள்.
உளவியல் ரீதியாக ஒருவரை வேகமாக கணிப்பிட கூடியவர்கள். பார்ப்பதற்கு அமைதியாக காணப்படுவார்கள் ஆனால் புத்திசாலிகள் ஒருவரை துல்லியமாக கணிப்பிடக்கூடியவர்கள்.
தவறான வழியில் செல்ல கூடியவர்களை கூட நல்வழிப்படுத்தும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. பிறரை பற்றியும் சிந்திக்கும் நல்ல மனம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
இந்த ராசியின் அதிபதி சனிபகவான் ஆகையால் மிகவும் நிதானமாக செயலாற்ற கூடியவர்களாக இருப்பார்கள்.
மங்கலகரமான ராசியாக இருப்பதனால் அடுத்தவர்களால் அதிகம் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள். அனுபவங்களால் வாழ்வை அழகாக்கி கொள்ளும் ஞானம் கைவரப்பெற்றவர்கள்.
அதிகளவான நண்பர்களை இவர்கள் கொண்டிருப்பார்கள். இலகுவாக எதனையும் கற்று கொள்ளும் திறன் படைத்தவர்கள் கடுமையான சூழல்களிலும் அமைதியாக நிதானம் தவறாது நடந்து கொள்வார்கள்.
மிகவும் கடினமாக உழைத்து முன்னேறுவார்கள் வாழ்வின் பிற்காலத்தில் அமைதியாக வாழ்வார்கள். பாசத்துடன் நடந்து கொள்வார்கள் அடுத்தவர்களை காயப்படுத்தாமல் வாழ கூடியவர்களாக இருப்பார்கள்.
ஒரு கண்ணாடி போல மற்றவர்களுடன் நடந்து கொள்ள கூடிய சீரிய குணங்கள் இவர்களிடம் உண்டு.
You May Also Like : |
---|
மார்கழி மாதம் சிறப்புகள் |
கார்த்திகை மாத சிறப்புகள் |