குடியுரிமை என்றால் என்ன

kudi urimai enral enna

அரசுக்கும் அதன் மக்களுக்குமிடையிலான உறவு மற்றும் ஆட்சி செய்யும் கோட்பாட்டைத் தெரிவு செய்தல் என்ற விடயத்தில் குடியுரிமை எண்ணக்கரு முக்கியம் பெறுகின்றது.

ஒரு சமூகத்தின் தனிமனிதனை சக மனிதர்களுடன் சமூக மற்றும் அரசியல் ரீதியாக இணைத்து வைக்கும் தொடர்புதான் குடியுரிமையின் சாராம்சமாக உள்ளது.

குடியுரிமை என்றால் என்ன

Citizen எனும் சொல்லானது Civis (சிவிஸ்) இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் “ஒரு நகர அரசில் வசிப்பவர்” என்பதாகும்.

அதாவது குடியுரிமை (citizenship) என்பது, சிறப்பாக ஒரு நாட்டின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறிக்கும்.

இந்தியக் குடியுரிமைச் சட்டம்

இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான ஒற்றைக் குடியுரிமையை வழங்குகின்றது.

இந்திய அரசியலமைப்பின் பகுதி-II சட்டப்பிரிவுகள் 5-11 வரை குடியுரிமை பற்றி விளக்குகின்றது.

இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்ததன்பின்பு 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகின்றது. இச்சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்தால் 8 முறை திருத்தப்பட்டுள்ளது.

தேசியக் குடிமக்கள் பதிவேடு என்பது குடியுரிமை சட்டத்திருத்தத்தின் சரத்துக்களின் படி ஒவ்வொரு இந்தியரும் தான் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர் இந்தியக் குடிமகன் என்பது ஏற்றுக் கொள்ளப்படும். ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தவறினால் குடியுரிமை பறிக்கப்படும்.

குடியுரிமை பெறுதல்

பிறப்பின் மூலம் – 1950 ஐனவரி 26 அன்றோ அதற்குப் பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.

வம்சாவளி மூலம் – 1950 ஐனவரி 26 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை (அவர் பிறந்தபோது) இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் பிறந்த அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும்.

பதிவின் மூலம் – குடியுரிமை பெற தகுதி உள்ள ஒருவர் இந்திக் குடியுரிமை கோரி பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம்.

இயல்புரிமை மூலம் – ஒரு வெளிநாட்டவர் இந்திய அரசிற்கு இயல்புரிமை கோரி விண்ணப்பிப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம்.

பிரதேச (நாடுகள்) இணைப்பின் மூலம் – பிற நாடுகள் அல்லது பகுதிகள் இந்தியாவுடன் இணையும் போது இந்திய அரசு அவ்வாறு இணையும் நாடுகளின் மக்களைத் தமது குடிமக்களாகக் கருதி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம்.

Read more: மக்களவை என்றால் என்ன

அரசியல் என்றால் என்ன