கடிதம் அல்லது திருமுகம் அல்லது மடல் (letter) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது.
இது உறவுகளுக்கிடையிலும் நண்பர்களுக்கு இடையிலும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகிறது. கடிதம் எழுதுவதானது மொழியின் இலக்கிய மற்றும் இலக்கண முறைகளையும் பாதுகாக்க உதவுகிறது. அதாவது எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான அறிவு வளர்க்கப்படுகிறது.
தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் அனுப்புதல் பிரபலமடைவதால் வழக்கொழிந்து வருகிறது. கடிதம் என்பதற்கு தமிழில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Table of Contents
கடிதம் வேறு பெயர்கள்
- மடல்
- திருமுகம்
- கடுதாசி
- ஓலை
- ஏடு
- அஞ்சல்
கடிதத்தின் வகைகள்
- உறவுமுறைக்கடிதம்
- தொழில்முறைக்கடிதம்
கடிதத்தின் உறுப்புகள்
- எழுதுபவரின் முகவரி
- விளிப்பு
- விடயம்
- முடிப்பு
- ஒப்பம்
கடிதம் பற்றிய மேற்கோள்கள்
“ஒரு நல்ல கடிதத்தின் சோதனை மிகவும் எளிமையானது என்று நான் நினைக்கிறேன், ஒரு கடிதத்தை வாசிப்பவர் ஒருவர் பேசுவதைக் கேட்டால், அது நல்ல கடிதமாகும்.”
“பிரிந்துள்ள நண்பர்களை இணைப்பது கடிதங்கள்.”
“கடிதம் யாருக்கு எழுதப்பெறுகின்றதோ அவனையும், எழுதுவோனையும் இருவரையும் எடுத்துக் காட்டுகின்றது”
“நல்ல காதற்கடிதம் எழுதுவதற்கு, நீ என்ன எழுத வேண்டும் என்பதை அறியாமலே எழுதத் தொடங்க வேண்டும், நீ என்ன எழுதியிருக்கிறாய் என்பதை அறியாமலே முடிக்கவேண்டும்.”
“மனம் மிகவும் தளர்ந்துள்ள சமயத்தில் ஒருவன் தன் நண்பர்கள் எழுதிய கடிதங்களையெல்லம் படித்துப் பார்த்தல் தலைசிறந்த மருந்தாகும்.”
கடிதம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள்
கடிதம் எழுதுவதால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் நற்பண்பு, நட்பினை வளர்த்தல் உள்ளிட்ட பண்புகள் வளரும். இவ்வாறு சிறப்புடையது கடிதம் ஆகும்.
Read more: ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்