கார உலோகங்கள், காரமண் உலோகங்கள், இடைநிலை உலோகங்கள் என உலோகங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
கார உலோகங்கள் என்பவை ஆவர்த்தன அட்டவணையில் முதல் தொகுதியில் இருக்கக்கூடிய உலோகங்கள் ஆகும். உதாரணம் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றைக் கூறலாம்.
உலகிலேயே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் காப்பர். இது ஆதிவாசிகள் காலம் முதல் பயன்படுத்தப்பட்டவை ஆகும்.
போர் உலகம் என்பது டைட்டானியம், குரோமியம், மாங்கனீஸ், ஜீகோனியம் போன்றவையாகும். போர்க் கருவிகளை செய்ய பயன்படுத்துவதனால் தான் இவற்றை போர் உலோகங்கள் என்கின்றனர்.
- உலோகங்களின் அரசன் இரும்பு ஆகும்.
- மின்கடத்தும் திறன் அற்ற ஒரே ஒரு உலோகம் பிஸ்மத்.
- நீர்ம நிலையில் உள்ள உலோகம் பாதரசம் ஆகும்.
- மின்கடத்தும் திறன் அதிகம் கொண்ட உலோகம் வெள்ளி.
- மின்சாரக் கம்பியாக அதிகம் பயன்படும் உலோகம் தாமிரம்.
- மின்னிழை செய்யப் பயன்படும் உலோகம் டங்ஸ்டன்.
- பச்சையத்தில் காணப்படும் உலோகம் மெக்னீசியம்.
- இதயம் சுருங்க தேவையான உலோகம் கல்சியம் ஆகும்.
- இதயம் விரிவடைய தேவையான உலோகம் பொட்டாசியம்.
- மண்ணிற்கு அடியில் பாதுகாக்கப்படுவது சோடியம்.
- அணு உலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் உலோகம் காட்மியம்.
- மிகவும் லேசான உலோகம் லித்தியம் ஆகும்.
- மிகவும் கடினமான உலோகம் ஆஸ்மியம் ஆகும்.
- இரும்புக்கு முலாம் பூசப் பயன்படுவது துத்தநாகம்.
- புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் உலோகம் கோபால்ட் ஆகும்.
உலோகம் என்றால் என்ன
பளபளப்பாகவும், வெப்ப, மின் கடத்தும் திறனும் கொண்ட கனிமங்கள் உலோகம் எனப்படும். அதாவது உலோகங்கள் என்பது ஒத்த பண்புடைய ஒரு தொகுதியை சார்ந்த தனிமங்கள் உலோகங்கள் ஆகும்.
உலோகத்தின் பண்பு
- உலோகம் பலம் வாய்ந்தது.
- பளபளக்கும் தன்மை கொண்டது.
- கடினத்தன்மை வாய்ந்தது.
- மின்சாரத்தைக் கடத்தக் கூடியது.
- தகடாக மாற்றக்கூடியது.
- கம்பியாக நீட்டக் கூடியது.
- வெப்பத்தைத் தாங்கக் கூடியவை.
- உயர் வெப்பநிலை, உருகுநிலை கொண்டவை
இயற்பியல் பண்புகள்
தோற்றம் – எப்பொழுதுமே கடின தன்மை கொண்டவை. படிகத்தின் திண்மங்களாக இருக்கும். ஆனாலும் பாதரசம் நீர்மமாக உள்ளது.
அடர்த்தி – உலோகம் அடர்த்தி கூடியது. எனினும் சோடியம், பொட்டாசியம் அடர்த்தி குறைவான உலோகங்களாகும்.
விலை உயர்ந்த உலோகங்கள்
உலகில் விலையுயர்ந்த உலோகம் தங்கம் மட்டுமே என நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தங்கத்தைப் போலவே விலை உயர்ந்ததாக வேறு சில உலோகங்களும் உள்ளன.
தங்கம் நகைத் தொழிலில் முக்கிய பங்கு வகிப்பதைப் போலவே வேறு சில தொழிற்துறையில் அந்த உலோகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உலோகங்களில் விலை உயர்ந்ததாக இருக்கும் உலோகங்களில் றோடியமும் (Rhodium) ஒன்றாகும். ரஷ்யா, தென்னாபிரிக்கா மற்றும் கனடாவில் வெட்டியெடுக்கப்படும் இவ் உலோகம் அதன் அரிப்பு மற்றும் வெப்பத்திற்கு அதிக எதிர்ப்பைக் கொண்டிருக்கும் பண்புக்காகப் பெயர் பெற்ற உலோகமாகும்.
பிளாட்டினமானது (Platinum) தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடிய உலோகமாகும். இவ்வுலோகம் அதன் அரிப்பை எதிர்க்கும் திறன், உலோகப் பிரகாசம் மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கு பலராலும் விரும்பப்படுகின்றது.
இவை தவிர ருதேனியம் (Ruthenium), இருடியம் (Iridium), ஆஸ்மியம் (Osmium) போன்ற பலவும் விலையுயர்ந்த உலோகங்களாகக் காணப்படுகின்றன.
Read more: அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு