இந்த பதிவில் “வாக்காளர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளும் தங்களது அரசியல் பங்களிப்பினை வாக்களிப்பதன் ஊடாக வழங்க முடியும்.
Table of Contents
வாக்காளர் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாக்கு எனப்படுவது
- வாக்காளரின் சக்தி
- ஜனநாயக கடமை
- வாக்காளர் தினம்
- முடிவுரை
முன்னுரை
மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சியே “ஜனநாயக ஆட்சி” என்று அறியப்படுகின்றது. நாட்டின் வாழ்விலும் தாழ்விலும் குடிமக்கள் அனைவருக்கும் எப்போதும் பங்குள்ளது.
நாட்டிலே உள்ள வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனை பய்படுத்தி நாட்டை ஆளும் தலைவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நாட்டின் அரசாங்கம் ஒரு வாக்காளரின் வாக்கு மூலமே தீர்மானிக்கப்படுகின்றது இக்கட்டுரையில் வாக்களாரின் அவசியம் மற்றும் வாக்கின் பலன்கள் தொடர்பாக நோக்கலாம்.
வாக்கு எனப்படுவது
வாக்கு எனப்படுவது ஒரு ஜனநாயக நாட்டில் வாழக்கூடிய பதினெட்டு வயது பூர்த்தியான ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வழங்கப்படுகின்ற வாக்குரிமையின் படி அரசியலில் நடைபெறும் தேர்தல்களில் தங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்துகின்ற ஒரு பலமான ஆயுதமாகும்.
இதன் வாயிலாக நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளும் தங்களது அரசியல் பங்களிப்பினை வழங்க முடியும். இது ஒவ்வொரு இந்தியர்களதும் அடிப்படையான உரிமையாகும். நாட்டின் வளர்ச்சி வீழ்ச்சிகளை தீர்மானிக்கும் ஒரு பலமான ஆயுதமாக வாக்கு இருப்பதனை யாவரும் அறிவர்.
வாக்காளரின் சக்தி
வாக்களிக்கின்ற ஒவ்வொரு பிரஜைகளும் ஒரு மிகச்சிறந்த அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்கிறார்கள் அதன் வாயிலாக தங்கள் நாட்டின் தலையெழுத்தை தாமே எழுதுகின்றார்கள்.
ஓர் ஒற்றை நபரின் வாக்கு என்ன செய்துவிட முடியும்? என்றால் இல்லை அது பலமானது சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஒரு வாக்கு ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றது.
எனவே வாக்களிப்பவர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து சரியான முறையில் சரியான நபர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
ஜனநாயக கடமை
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடையதும் அடிப்படையான ஜனநாக கடமை என்பது வாக்களிப்பதாகும். தேசத்தின் மீது பற்றுடைய மக்கள் ஆர்வத்தோடு தமக்கான தலைவர்களை தேர்நதெடுக்க முன்வருவர்.
நாட்டின் இறைமை மற்றும் பெருமையை பாதுகாக்க ஒவ்வொரு பிரஜைகளும் இதனை விருப்பத்தோடு செய்கின்றார்கள்.
வாக்கின் முக்கியத்துவமும் அவற்றினால் உருவான பெரும் மாற்றங்களையும் எமது வரலாற்றில் இருந்து எம்மால் கற்று கொள்ள முடியும் அந்தவகையில் எதிர்காலம் சிறக்க அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
வாக்காளர் தினம்
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மக்கள் மத்தியில் இதன் ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் இந்திய தேர்தல் ஆணையமானது ஜனவரி 25 ஆம் திகதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகின்றது.
இதன் வாயிலாக அனைவரது வாக்கும் உன்னதமானதும் மகத்துவமானதும் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வடைய செய்வதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதன் ஊடாக மக்களின் அரசியல் ஆர்வத்தை அதிகரிக்க முடியும் என நம்பப்படுகிறது.
முடிவுரை
இன்றைய அரசியலில் ஊழல் மற்றும் இலஞ்சம் நிறைந்திருப்பதனால் நாட்டில் ஆளுமையற்ற கபடம் நிறைந்த அரசியல் வாதிகள் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கின்றார்கள்.
இது நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய முட்டுக்கட்டையாக இருப்பதனால் ஒவ்வொரு வாக்காளர்களும் ஒற்றுமையாக கருத்தொருமித்து ஆளுமையான தலைவர்களுக்கு வாக்களித்து அவர்களை தெரிவு செய்வது மிகவும் அவசியமானதாகும் இது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
You May Also Like : |
---|
என் வாக்கு என் உரிமை கட்டுரை |
வேற்றுமையில் ஒற்றுமை கட்டுரை |