வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும்.
பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது.
சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன.
எனினும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு.
வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். வறுமையிலும் செழுமையாக வாழ வேண்டும். இவ்வாறான வறுமை என்ற சொல்லிற்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.
வறுமை வேறு சொல்
- ஏழ்மை
- இடர்
- துன்பம்
- இல்லாமை
- மிடி
- மிடர்
- மிடிமை
வறுமையின் வகைகள்
- முற்றிலும் வறுமை
முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக் குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும்.
- ஒப்பீட்டு வறுமை
ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது.
அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளே ஆகும்.
வறுமையினால் ஏற்படும் விளைவுகள்
- வறுமையில் வாழ்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
- அதிக மன அழுத்தம் ஏற்படும்.
- உணவின்மையால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
வறுமை பற்றிய மேற்கோள்கள்
- தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன்.
- உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர்.
- வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர்.
- வறுமையினும் பெருங்கேடுமில்லை, செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை.
- வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும்.
- வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.
- எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன்.
- யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது.
- செல்வமே வறுமைக்குக் காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும்.
Read more: வறுமை என்றால் என்ன