வசந்த பஞ்சமி என்றால் என்ன

Vasantha Panchami In Tamil

இந்த பதிவில் “வசந்த பஞ்சமி என்றால் என்ன” பற்றி விரிவாக காணலாம்.

வசந்த பஞ்சமி என்றால் என்ன

பஞ்சமி என்பது மாதந்தோறும் வரும் வளர்பிறை ஐந்தாம் நாளாகவும், தேய்பிறை ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும். இப்பஞ்சமி நாட்களில் மிக விசேஷமானது கருட பஞ்சமி மற்றும் வசந்த பஞ்சமி ஆகும்.

தட்சிணாய காலத்தில் அதாவது ஆவணி மாதத்தில் வளர்பிறை பஞ்சமியில் சூரியன் பயணிப்பார் இதனை கருட பஞ்சமி என்றும், உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தைமாதத்தில் வரும் பஞ்சமி திதியினை வசந்த பஞ்சமி என அழைக்கப்படுகின்றது.

குளிர்காலம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுவதால், வசந்த பஞ்சமி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது.

வசந்த பஞ்சமி வரலாறு

தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியினை ‘மாக மாதம்‘ என அழைப்பர். இக்காலத்தில் கௌரி தேவி, சப்த கன்னியர்கள் வழிபாடு சிறப்பாக இடம்பெறும்.

இம்மாக மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி நாளிலே சகல கலைகளுக்கு அதிபதியாகவும் கல்வி, கேள்வி, ஞானம், வாக்குவன்மையும் அருளுகின்ற சரஸ்வதி தேவி அவதரித்த நாளாக நம்பப்படுகின்றது.

அதாவது இத்தினத்திலேயே, உயிர்களை படைக்கும் தொழிலை செய்துக் கொண்டிருந்த பிரம்மதேவருக்கு சோர்வு ஏற்பட சரஸ்வதி தேவியை தோற்றுவித்து அவரது வீணையின் மூலம் மனித உயிர்களுக்கு பேசும் திறனையும், கல்வி அறிவினையும் புகட்டுமாறு கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

இப்பஞ்சமி நாளினை ‘ரிஷி பஞ்சமி’, ‘காம பஞ்சமி’, ‘ஸ்ரீ பஞ்சமி’ எனவும் அழைப்பர். குளிர்காலம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்று கொண்டாடும் முகமாகவும் இப்பஞ்சமி நாள் அமைந்துள்ளது.

மேலும் துவாபரை யுகத்தில் கண்ணனும், பலராமரும் சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் செய்ய தொடங்கிய நாளாகவும் இந்நாளினை புராணங்கள் கூறுகின்றன.

பஞ்சமி பூஜை

அதிகாலையில் எழுந்து புண்ணிய ஸ்தலங்களில் நீராடி விட்டு பின் சரஸ்வதி தேவிக்கு விருப்பமான மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும் (அன்றைய தினம் முழுவதும் அணிவது சிறந்தது).

வீட்டையும் பூஜையறையையும் சுத்தம் செய்து பூஜையறையில் கோலமிட்டு ஒரு மரப்பலகை போட்டு அதன் மேல் புதிய மஞ்சள் நிற வஸ்திரத்தை விரித்து விடல் வேண்டும்.பூஜையறையில் வைக்கப்படும் விநாயகரும் மஞ்சள் நிறத்தில் இருத்தல் வேண்டும்.

பின் சரஸ்வதி தேவியின் விக்கிரகத்தை அல்லது திருவுருவப் படத்தை மஞ்சள் நீராட்டி, பின் மஞ்சள் நிற ஆடை சாற்றி மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய்வேத்தியமாக மஞ்சள் நிற போளி, கேசரி, பொங்கல், பால் பாயாசம் என்பவற்றை படைத்து தூபதீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

வட இந்தியாப் பிரதேசங்களில் வீடுகளிலும், ஆலயங்களிலும், பொது இடங்களிலும் சமுதாய திருவிழாவாக விசேட பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது.

இராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள ‘பிரம்மா சரஸ்வதி கோயில்’, கர்நாடகாவில் உள்ள ‘உடுப்பி கிருஷ்ணர் கோயில்’, ஒரிசாவில் உள்ள ‘ புரி ஜெகன்நாதர் கோயில்’ போன்ற ஆலயங்களில் வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வசந்த பஞ்சமி பலன்கள்

துவாபரை யுகத்தில் கண்ணனும், பலராமரும் சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் செய்ய தொடங்கிய மற்றும் கல்வித் தெய்வமாகிய சரஸ்வதி அவதரித்த நாள் என்பதனால் இந்நாளில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்தல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை செய்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

அத்துடன் இந்நாளில் சரிவர விரதமிருப்பதன் மூலம் சரஸ்வதி தேவியின் பூரண அனுக்கிரகத்தை பெறலாம்.

சரஸ்வதி நமஸ்த்துப்யம்

வாரே காமரூபினி

வித்யாரம்பம் கரிஷ்யாமி

சித்தர் போதுமே ஸதா” என்ற மந்திரத்தையும்,

சரஸ்வதி மஹாபாஹே

லோச்சனே விஷ்வரூபே

விசாலக்ஷி விக்ரம்

தேவி நமோஸ்துதே” என்ற மந்திரத்தையும் 21 முறை சரிவர உச்சரித்து வர பரிபூரண அருளைப் பெறலாம்.

You May Also Like:
ராம நவமி என்றால் என்ன
பீரோ வைக்கும் திசை