மே தினம் என்றால் என்ன

may dhinam in tamil

உலகில் காணப்படும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் உழைத்து கொண்டே காணப்படுகின்றார்கள். ஒரு நாட்டின் முன்னேற்றகரமான வளர்ச்சிக்கு உழைப்பாளர்கள் மிகவும் அவசியமானவர்கள் ஆவார்கள். அந்த வகையில் உழைப்பாளர்களை முன்னிட்டே மே தினம் கொண்டாடப்படுகின்றது.

மே தினம் என்றால் என்ன

மே தினம் என்பது யாதெனில் உழைப்பாளர்களை கௌரவிக்கும் தினமாகும். அதாவது மே மாதம் 1ம் திகதி இந்த மே தினம் அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.

உழைப்பாளர்கள் பல்வேறு ரீதியில் ஓய்வின்றி உழைக்கின்றனர். உழைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த நாளாகவே இந்த மே தினம் காணப்படுகின்றது. மே தினத்தினை தொழிலாளர் தினம் எனவும் அழைப்பர்.

மே தினத்தின் நோக்கம்

ஆரம்ப காலங்களிலிருந்து மக்கள் பல்வேறு வகையில் உழைத்து கொண்டே இருந்தனர். அடிமைப்படுத்தி அவர்களின் உழைப்பை ஒரு சில வர்க்கத்தை சேர்ந்தவர்கள் சுரண்டினர்.

மேலும் இவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறானவற்றிற்கு எதிராகவே உழைப்பால் உயர்வோம் என்ற தொனிப் பொருளில் மே தினமானது கொண்டாடப்படுகின்றது என்பதனை இந்த தினத்தின் நோக்கமாக கொள்ளலாம்.

இத்தினமானது உழைப்பாளர்களையும் மதிக்க வேண்டும் என்பதனை உணர்த்துவதை நோக்காகக் கொண்டு காணப்படுகின்றது.

மே தினத்தின் வரலாறு

ஆரம்ப கால கட்டமான 19ம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதிகளில் அமெரிக்காவில் தொழிலாளர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதோடு அவர்கள் மிகுந்த சிரமத்துடனேயே தனது வேலைகளை மேற்கொண்டனர்.

இவ்வாறாக காணப்படும் பட்சத்தில் தொழிலாளர் இயக்கம் என்ற ஒன்று உருவானதோடு இதனூடாக வேலை நிறுத்தம், எதிர்ப்புக்கள் என தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு தொழிற் சங்கங்கள் செயற்பட்டன.

அந்த வகையில் தொழிலாளர்கள் முதன் முதலில் ஒரு கோரிக்கையினை முன்வைத்தனர். எட்டு மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையாகும். இந்த கோரிக்கையினை 1ம் திகதி மே 1886ஆம் ஆண்டில் அனைத்து தொழிலாளர்களுக்கும் இக்கோரிக்கை உகந்தது என முடிவிற்கு வந்தது.

மேலும் 1 மே 1886 ஆண்டிலே எட்டு மணி நேர வேலை கோரி பல தொழிலாளர்கள் வேலை நிறுத்த செயற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

இந்த செயற்பாடானது சில இடங்களில் வன்முறையாக மாறியது. இதனால் பலர் பல்வேறு சேதங்களுக்கு உட்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாளே தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பெற்று கொள்ளவும் பல்வேறு தொழிற் சங்கங்களை நிறுவவும் வழியமைத்து தந்தது.

அந்த வகையில் இப்போராட்டத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே 1890 ஆண்டு முதல் முதலாக தொழிலாளர் தினம் அல்லது மே தினம் கொண்டாடப்பட்டது.

மேலும் இந்த நாளானது பல்வேறு நாடுகளில் விடுமுறையான நாளாக காணப்படுவதோடு இந்நாளில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் வழியமைத்து தருகின்றது.

மே தினத்தின் முக்கியத்துவம்

தொழிலாளர்களானவர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்கவும் ஒரு நாட்டை சிறப்பாக வளர்ச்சியடையச் செய்யவும் மே தினமானது அவசியமான தொன்றாகும்.

தொழிலாளர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதை தவிர்த்து குறித்த நேரத்தில் வேலையினை மேற்கொள்வதற்கும் தாங்களும் சமூகத்தில் உரிமைகளை வென்றெடுத்து பல கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்ற நம்பிக்கையை முன்வைப்பதற்கும் மே தினம் கொண்டாடப்படுவது முக்கியமானதொன்றாகும்.

ஒரு நாடு சிறந்த முறையில் வளர்ச்சியடைந்து தம் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கும் மே தினமானது அவசியமானதொன்றாகும்.

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் அதனூடாக அவர்களுடைய பிரச்சினைகளை போக்குவதற்கும் மே தினமானது துணைபுரிகின்றது.

அத்தோடு தொழிலாளர்கள் சிறந்த முறைமையில் அவர்களது உரிமைகளை வென்றெடுக்கவும் மே தினமானது துணை புரிகின்றது.

Read more: கொத்தடிமை முறை ஒழிப்பு கட்டுரை

குழந்தை தொழிலாளர் உருவாக காரணம்