இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும்.
குறிப்பாக, கும்பகோணத்தில் புனித நீராடல் என்பதானது மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும்.
தமிழ்நாட்டு திருவிழாக்களில் மிகவும் குறிப்பிடத்தக்க திருவிழாக்களில் மாகாமகம் முக்கிய இடம் பிடிக்கின்றது. இந்தத் திருவிழா கும்பகோணத்தில், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
இக்குளத்தில் நீராடுபவர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடிக் காவிரி நதிக்குச் செல்வது மரபாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று தீர்த்த குளத்தில் நீராடி புண்ணியம் பெறுகின்றனர்.
பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தை பெற தேவர்கள், அசுரர்கள் போராட்டம் நிகழ்ந்தபோது, அமிர்தக் குடத்திலிருந்து அமிர்த துளிகள் தெறித்துச் சிதறிய 12 இடங்களில் கும்பகோணம் மாமாங்க திருக்குளமும் ஒன்றாகும்.
மாமாங்கமாடி, மதுரை கடலாடி, ஸ்ரீரங்கமாடி, திருப்பாற்கடலாடி என்ற சொற்தொடர்கள் எல்லாம் மாமாங்கப் பெருமையை விளக்கி நிற்கின்றன.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரையூர், தாமிரபரணி ஆகிய நவ நதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியில் அவை பாவங்களை கொண்டவையாகின.
இந்த பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான் கும்பகோணத்தில் அக்கினி திக்கில் ஓர் தீர்த்தக்கரை உண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும்போது வரும் மக நட்சத்திரத்தினுடன் பொருந்திய பௌர்ணமி நாளை மகா நாள் என்பர்.
அந்த நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்கள் பாவங்கள் நீங்கும் என்றார். அதன்படி நதிகளில் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டனர் என்பது தொன்மக் கதையாகும்.
இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும், நவக் கன்னியர் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன.
கும்பகோணம் மகாமகக் குளத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியங்களையும் நற்பலன்களையும் வழங்கும் என்கிறது சாஸ்திரம்.
மகாமகத்தின் போது வைணவக் கோவில்களின் சுவாமி எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும். இக்கோவில்கள் அனைத்தும் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன.
சார்ந்தபாணிக் கோவில், சக்கரபாணிக் கோவில், ராமசுவாமி கோவில், ராஐ கோபால சுவாமிக் கோவில், வராகப் பெருமாள் கோவில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
Table of Contents
மாமாங்கம் என்றால் என்ன
மாமாகம் என்பதே மாமாங்கம் என்றானது. அதாவது, மகாமகத்தை பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுகின்றனர். இதற்கு பாவநீக்கம் என பொருள். மாசி மாதமன்று குரு கும்பராசியில் இருக்கும் பொழுது மகம் நட்சத்திரமும், பூராடன நட்சத்திரமும் பொருந்தி வரும் காலம் மகாமகம் ஆகும்.
மேலும் மலையாளத்திலும், மாமாங்கம் என்ற வார்த்தை புழங்குகிறது. மலையாளத்தில், மாமாங்கம் என்பதற்கு, ஒரு பெரிய மாமன்னரின் கீழ் பணிபுரியும் ஆட்கள் என்ற பொருள் ஆகும்.
மகாமகக் குளத்தில் 19 தீர்த்தங்கள்
மகாமகக் குளத்தில் 19 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. அவையாவன
- வாயு தீர்த்தம்
- கங்கை தீர்த்தம்
- குபேர தீர்த்தம்
- யமுனை தீர்த்தம்
- கோதாவரி தீர்த்தம்
- சான்ய தீர்த்தம்
- நர்மதை தீர்த்தம்
- சரஸ்வதி தீர்த்தம்
- இந்திர தீர்த்தம்
- அக்னி தீர்த்தம்
- யமன் தீர்த்தம்
- காவிரி தீர்த்தம்
- குமரி தீர்த்தம்
- நிருதி தீர்த்தம்
- தேவ தீர்த்தம்
- சரயு தீர்த்தம்
- வருண தீர்த்தம்
- பயோஷினி தீர்த்தம்
Read more: அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன