மரபு என்றால் என்ன

marabu enral enna in tamil

தமிழ் மொழியானது ஒரு சொல்லிற்குப் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அவ்வாறே மரபு என்பதற்கும் பல அர்த்தத்தினைக் கொண்டுள்ளது. அதனைத் தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

மரபு என்றால் என்ன

மரபு என்ற சொல்லுக்கு வழக்கம் என்று பொருளாகும். மேலும் நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் விளங்கினார்களோ அப்பொருளை அவ்வாறே வழங்குவது மரபு ஆகும்.

அதாவது அறிவுடையவர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபு எனப்படுகின்றது.

மேலும் மரபு என்பது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படுவதாகும்.

மரபு சொற்கள் என்றால் என்ன

நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில சொற்களை அப்படியே நாமும் கையாள்கின்றோம். தமிழ்மொழியில் அவ்வாறு வழங்கி வரும் சொற்கள் மரபுச் சொற்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய மரபுச் சொற்கள் சிலவற்றை இங்கு காண்போம்.

இலைக்குரிய மரபுப் பெயர்கள்

முருங்கை, பலா, மா வாழை – இலை

தென்னை, பனை, கமுகு, தாளை, ஈச்சை – ஓலை

நெல், புல், சோளம் – கதிர்

கரும்பு – தோகை

தொகுதி மரபு பெயர்கள்

பூங்கொத்து – மஞ்சரி

வாழைக்குலை -தாறு

முந்திரி, தென்னை, ஈச்சை, பனை – குலை

திராட்சை, புளி – கொத்து

நெல், சோளம் – கதிர்

ஒலிமரபுப் பெயர்கள்

ஆடு – கத்தும்

எருது – எக்காளமிடும்

குதிரை – கனைக்கும்

குரங்கு – அலம்பும்

சிங்கம் – முழங்கும்

நரி – ஊளையிடும்

பூனை – சீரும்

ஆந்தை – அலறும்

குயில் – கூவும்

கோழி – கொக்கரிக்கும்

சேவல் – கூவும்

புறா – குனுகும்

பசு – கதறும்

நாய் – குரைக்கும்

தேனீ – ரீங்காரமிடும்

கோட்டான் – அலறும்

வானம்பாடி – பாடும்

வினை மரபு

அம்பு – எய்தார்

ஆடை – நெய்தார்

பூ – பறித்தார்

மரம் – வெட்டினார்

மாத்திரை – விழுங்கினார்

சோறு – உண்டார்

பால் – பருகினார்

கூடை – முடைந்தார்

தண்ணீர் – குடித்தார்

தமிழர் மரபு

தமிழ் மொழி எத்தகைய தனிச்சிறப்பு என்பதனை தொல்காப்பியர் மிக அழகாகக் கூறியுள்ளார். அதாவது “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்” எனக் கூறியுள்ளார். மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. அப்படிப்பட்ட தமிழ்மொழியின் மரபானது பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.

வாழ்க்கைக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம். அதுபோல மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு ஆகும்.

மொழிக்குரிய மரபுகளை பின்பற்றித்தான் தமிழ்ச் செய்யுள்கள் இருக்கும். ஐம்பூதங்கள், ஐம்பால், இரண்டு திணைகள் (அஃத்திணை, உயர்தினை) இவற்றினை உள்ளடக்கியே தமிழ்மொழியில் செய்யுள்கள் எழுதப்பட்டிருக்கும்.

ஒரு செயலை ஒரு பெண் செய்தால் இறுதியில் “ஆள்” என்று முடியும், ஒரு செயலை ஆண் செய்தால் இறுதியில் “ஆன” என்று முடியும், ஒரு செயலை பலர் செய்தால் இறுதியில் “கள்” என்று முடியும். எடுத்துக்காட்டு – கமலா பூ பறித்தாள், ராமு விளையாடுகிறான், அவர்கள் படிக்கின்றார்கள்.

மேலும் வாழையடி வாழையென வாழ்க என்று வாழ்த்துவது தமிழர் மரபாகும். வெற்றிலையும், பாக்கும் சேர்ந்தது தாம்பூலம் எனப்படுகின்றது. இது மங்கள நிகழ்ச்சிகளில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும். இதுவும் தமிழர் மரபாகும்.

விழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றில் மாவிலை கட்டுவது, திருமணமான பெண்கள் கழுத்தில் தாலி அணிவதும், காலில் மெட்டி அணிவதும் தமிழர் மரபாகும்.

Read more: பண்பாடு என்றால் என்ன

மொழியும் பண்பாடும் கட்டுரை