புத்த பூர்ணிமா என்றால் என்ன

buddha purnima in tamil

அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தின் பௌர்ணமி தினத்தில் பௌத்த சமயத்தோரால் புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். கௌதம புத்தர் (Gautama Buddha) அவதரித்த வைகாசி மாதம் பௌர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் எனப் பல பெயரில் அழைக்கப்படுகிறது.

பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.

புத்த மதம் என்ற புதிய மதத்தை புத்தர் உருவாக்கி அதன் கொள்கைகளை உலகறியச் செய்தார்.

புத்த பூர்ணிமா உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளின் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

புத்த பூர்ணிமா என்றால் என்ன

புத்த பூர்ணிமா என்றால் என்ன

புத்த பூர்ணிமா என்பது புத்தருக்கு ஞானம் கிடைத்த நாள் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில்தான் அவர் பிறந்தார் என்றும், இறந்தார் என்றும் கருதப்படுகிறது.

இது மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

புத்தர் வரலாறு

சித்தார்த்தர் என்ற இயற்பெயரைக் கொண்ட புத்தபெருமான் கபிலவஸ்து என்ற நாட்டில் சுத்தோதனர் மன்னனின் மகனான லும்பினி என்ற இடத்தில் கி.மு 563 இல் பிறந்தார்.

இவர் பிறந்த நாள் முழு நிலவு நாளான வைசாகா ஆகும். புத்தர் பிறந்த போது அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன எனக் கூறப்படுகின்றது.

இவருக்கு பதினாறு வயதிருக்கும் போது, இவரின் தந்தையார் யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். இவர்களின் திருமண வாழ்க்கையின் பயனாக ராகுலா என்றொரு மகனும் பிறந்தான்.

இல்லற வாழ்விலும், அரச வாழ்விலும் ஈடுபாடு இல்லாமல் 29 வயதில் வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார்.

காசிக்கு அருகே உள்ள கயாவில் போதி மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஆறு ஆண்டுகள் தவம் செய்து ஞானம் பெற்றார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

புத்த பூர்ணிமாவின் சிறப்புகள்

புத்த பூர்ணிமா தினத்தில் மிகப் பிரதானமான மூன்று சிறப்புகள் உள்ளன.

  • புத்தர் பிறந்த தினம்
  • புத்தர் ஞானம் அடைந்த தினம
  • புத்தர் பரி நிப்பாணம் அடைந்த தினம்

போன்ற மூன்றுமே மே மாதத்தில் வரும் பூரணை நாளில் நடந்ததாக வரலாறு உள்ளது.

ஆசையே மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என்பதை உணர்ந்தும், அனைவருக்கும் வலியுறுத்தும் விதமாக, தன் அரச பதவியை விடுத்து அனைத்தையும் துறந்து வாழ்ந்தார்.

அரிசி, பால், சக்கரை மற்றும் உலர் பழங்களைப் பயன்படுத்தி பிரசாதம் செய்து முதலில் புத்தருக்கு படைத்து பின்னர் துறவிகளுக்கு வழங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து குடும்பத்தவர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புத்த பூர்ணிமா தினத்தில் வழிபாடு செய்தால் மனக்கவலை நீங்கி வாழ்வில் வளம்பெற முடியும்.

You May Also Like :
தொல்லியல் என்றால் என்ன
கலாச்சாரம் என்றால் என்ன