இந்த பதிவில் “பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை” பதிவை காணலாம்.
பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் அடக்குமுறைகளையும் கண்டு கொதித்தெழுந்து எதிர்த்து தனது கவிதைகள், எழுத்துக்கள் மூலம் உரக்க குரல் கொடுத்தவர் பாரதியார்.
Table of Contents
பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- புரட்சியின் அடிப்படை
- பெண்களின் உரிமைகள்
- இன்றைய பெண்கள்
- முடிவுரை
முன்னுரை
இந்த சமூகத்தின் சாபக்கேடான பெண்ணடிமை தனத்தை உடைத்தெறிய இந்த உலகத்தில் பிறந்த உன்னதமான மனிதம் மகாகவி சுப்ரமணிய பாரதியார் என்பது பொருத்தமானது.
இவர் இந்த சமூகத்தை மாற்றி அமைக்க கூடிய அற்புதமான பேராற்றல் மிக்க புதுமை பெண் என்ற வடிவத்தை பெருங்கனவாக கொண்டு ஒப்பற்ற பல இலக்கியங்கள் மூலம் தற்கால பெண்ணிய சிந்தனைகளுக்கு ஒரு விதையினை அன்று போட்டார்.
இக்கட்டுரையில் பாரதி கண்ட புதுமை பெண்கள் தொடர்பாக நோக்கலாம்.
புரட்சியின் அடிப்படை
காலம் காலமாக பெண் இனமானது சில ஆணாதிக்கம் நிறைந்தவர்களால் இன்னல்கள் பலவற்றை அனுபவித்து வருகின்றனர். இதனை அக்காலத்து மடமைகள் நிறைந்த வழக்கங்கள் வழிமொழிந்தன.
இவை தான் எமது சமூக முன்னேற்றத்தை தடுக்கின்றன. என்பதை நன்குணர்ந்த பாரதியார் பெரும் புரட்சிகர புயலாக தமிழகம் எங்கும் வீசினார்.
பாரதியார் தம் எதிர்பார்ப்பு, ஏக்கம், கனவு, கற்பனை, குறிக்கோள், வேட்கை போன்ற அனைத்தையும் சமவிகிதத்தில் கலந்து உருவாக்கிய கற்பனை வடிவமே “புதுமை பெண்” ஆகும்.
இவர் ஒரு புதுமை பெண் என்கின்ற அக்கினி குஞ்சினால் இந்த சமூகத்தின் இன்னல்கள் அடியோடு துடைக்கப்படும் என்றெண்ணி புதுமை பெண்கள் என்ற கனவு வடிவத்தை தனது கவி வரிகள் மூலம் உருவாக்கினார்.
பெண்களின் உரிமைகள்
பெண்கள் இந்த சமூகத்தின் பல வடிவங்களிலும் இந்த சமூகத்தவர்களால் வஞ்சிக்கப்பட்டு பல இன்னல்களை சகித்து கொண்டு வாழும் நிலையானது காணப்பட்டது. அவர்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது. சுதந்திரம் பறிக்கப்பட்டது.
இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும்படி செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் எதிர்த்து பெண்களுக்கு கல்வி உரிமை சுதந்திரமாக வாழும் உரிமை ஆண்களுக்க நிகராக பெண்களும் வாழ்கின்ற முற்போக்கு சிந்தனையின் விதையினை பாரதி விதைத்தார்.
இன்றைய பெண்கள்
இன்றைய காலத்து பெண்கள் பல வழிகளிலும் சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். கல்வி உரிமை எல்லா துறைகளிலும் வேலை செய்யவும் குடும்பங்களை நிர்வகிக்கவும் தலைமைத்துவம் நிறைந்தவர்களாகவும் ஒரு நவீனத்துவ பெண்களாக காணப்படுகின்றனர்.
ஆயினும் இன்றுவரை பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் சில முட்டாள் தனமாக செயற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருப்பது சாபக்கேடுகளாகும்.
முடிவுரை
பாரதி கண்ட புதுமை பெண்கள் என்பவர்கள் மிகவும் உன்னதமானவர்கள் கற்பனைகளுக்கும் அப்பாற்றபட்டவர்கள். வெறுமனே இன்றைய காலத்து நாகரீக வயபட்டவர்கள் அல்லர்.
புதுமை பெண்கள் என்ற பெயரில் இன்று கலாச்சார சீர்கேடுகளும் ஒழுக்கமற்ற நடத்தைகளையும் வெளிப்படுத்துகின்ற பெண்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தானும் தன்னை சார்ந்த சமூகமும் சிறப்புற வாழ நினைப்பவளே போற்றுதலுக்குரிய புதுமைப்பெண் ஆவாள் அதை தான் பாரதியாரும் விரும்பி இருந்தார் என்பது வெளிப்படை.
You May Also Like :