இன்று நாம் வாழக்கூடிய நவீன உலகானது, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு முன்னேற்றங்களையும், அபிவிருத்தியையும் எட்டியுள்ளது. இதன் விளைவாக இன்று உலகில் பல்வேறு தொழில்துறைகள் விருத்தி அடைந்துள்ளமையினையும் காண முடியும்.
Table of Contents
பரந்து கிடக்கும் தொழில் உலகு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தொழில் என்றால் என்ன
- தொழில் மயமாக்கலின் தேவை
- தொழில் வளர்ச்சியின் வகைகள்
- இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி
- முடிவுரை
முன்னுரை
உலக நாடுகள் இடையே பொருளாதாரத்தை அதிகப்படுத்தும் நோக்குடன், புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதோடு, பல்வேறு புதிய தொழில் துறைகளும் வளர்ச்சி கண்டது.
அதாவது தேசிய வருமானமும், தனிநபர் வருமானமும் உயரும் வகையில் உலகெங்கும் பல்வேறு தொழில்கள் உருவாகி வளர்ச்சி கண்டுள்ளன.
தொழில் என்றால் என்ன
ஒருவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக பணம் சம்பாதிக்கக் கூடிய செயல் தொழில் எனப்படுகின்றது.
அதாவது ஒருவர் பணம் ஈட்டுதல் அல்லது சேவை மனப்பான்மையுடன் தன்னுடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவழித்தல் தொழில் எனப்படுகின்றது.
தொழில் மயமாக்கலின் தேவை
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், தொழில்துறை பாரியளவு செல்வாக்கு செலுத்துவதனால் இந்த தொழில்மயமாக்கம் அவசியமாகின்றது.
அதாவது அதிக நபர்களை வேலைக்கு அமர்த்துதல், பன்னாட்டு சந்தைகளை ஊக்குவித்தல், அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், தனிநபர் மேம்பாடுகளை அதிகரித்தல், கணினி தொழில்நுட்பத்தின் பயன்பாடு போன்றவற்றின் ஊடாக அதிக அளவு உற்பத்தி செய்யும் தொழில்துறைகள் பரவலாக்கப்படுகின்றன.
இவ்வாறான தொழில் மயமாக்கம் இல்லாமையினால் பல நாடுகள் பின்னடைவில் உள்ளன. எனவே நவீன உலகில் விரைவான வளர்ச்சியயைப் பெற தொழில் மயமாக்கம் அவசியமாகும்.
தொழில் வளர்ச்சியின் வகைகள்
உலகில் பரந்து கிடக்கும் தொழில்களுள், தொழிலின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு என்பவற்றின் அடிப்படையில் தொழில்கள் நான்கு வகைப்படுத்தப்படுகின்றன.
அடிப்படைப் பண்டங்கள் – இதில் சீமந்து, ரசாயன பொருட்கள் மற்றும் உரம் போன்றவை உள்ளடங்கும்.
மூலதனப் பண்டங்கள் – இங்கு இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகள், பொறியியல் உபகரணங்கள் போன்றன உள்ளடங்கும்.
நுகர்வுப் பண்டங்கள் – போக்குவரத்து சாதனங்கள், உணவுப் பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்கள் என்பன உள்ளடங்கும்.
இடைவினைப் பண்டங்கள் – வணர்னப்பூச்சு, குழாய் போன்ற உற்பத்திகள் உள்ளடங்கும். இவ்வாறாக தொழில் வகைப்பாடு காணப்படுகின்றது.
இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி
இந்தியா சுதந்திரம் அடைந்த போது தபால் துறை, ரயில் போக்குவரத்து, துறைமுகம் போன்ற சில தொழில் துறைகளே வளர்ச்சி கண்டிருந்தன.
பின்னர் பொதுத்துறை நிர்வாகம் தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமையும் பாதுகாப்பும் ஊக்கமும் அழித்தமையினால் நெசவுத் தொழில் பருத்தி தொழில் தேயிலைத் தொழில் சீனி உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்கள் வளர்ச்சி கண்டன.
இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, போக்குவரத்து சாதனங்களான கப்பல், விமான உற்பத்தியில் போன்று உச்ச வளர்ச்சி கட்டங்களை தொட்டுள்ளமையை காணலாம்.
மேலும் பல்வேறு கைத்தொழில்கள் மற்றும் விவசாயத்துறை, மருத்துவம், பொறியியல், சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் இன்று பல்வேறு வளர்ச்சிகளை பெற்று, தொழில்துறையின் வளர்ச்சி பரவி இருப்பதனை காணலாம்.
முடிவுரை
இன்று உலகமயமாக்கம் காரணமாக உலகம் ஒரு உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. இதன் வெளிப்பாடாகவே வீட்டில் இருந்தபடியே உலகில் உள்ள ஏதோ ஒரு நிறுவனத்தின் அங்கத்தவர்களாக இணையதளத்தின் மூலம் எம்மால் பல்வேறு தொழில்களை புரிந்து கொள்ள முடிகின்றது.
இது உலகின் தொழில்துறை பரந்து உள்ளமையையே எடுத்துக்காட்டுகின்றது. எனவே ஒருவர் ஏதோ ஒரு அடிப்படையில் தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு தேவையான தொழிலினை செய்து கொள்வதற்கான பல்வேறு தொழில்கள் இந்த உலகில் பரவி உள்ளது.
Read More: மொபைல் போன் நன்மைகள் தீமைகள்