படிமம் என்றால் என்ன

padimam endral enna in tamil

படிமம் என்பது கவிஞர்களுக்கு உதவக்கூடிய ஒரு படைப்பாக்க உத்தியாகும். ஒரு கவிஞரின் கவிதையைப் படிக்கக்கூடிய ரசிகர்கள் கவிஞர் சொல்ல வரும் கருத்துக்களை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு காட்சி அமைப்பில் ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் தன்னுடைய கருத்தை காட்சி வடிவத்தில் கவிஞர் கொடுக்கின்றார். அதுமட்டுமல்லாது, படிக்கும் ரசிகர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ ஓவியத்தை பார்ப்பதுபோல் ஒரு அனுபவத்தை தரலாம்.

கவிஞர் தான் சொல்ல வந்த கருத்தை புதுமுறையில் சொல்வதற்கு படிமம் முக்கியமானதாகும். கருத்துத் தன்மையுள்ள ஒன்றுக்கு காட்சித் தன்மையுள்ள ஒப்பீட்டை காட்டும் போது அது படிப்பவர்கள் விரும்பிப் படிக்க ஒரு காரணமாக அமையும்.

படிமம் என்றால் என்ன

படிமம் என்ற சொல்லுக்கு காட்சி அல்லது காட்சிப்படுத்தல் என்பது பொருளாகும். ஒரு கவிஞர் தாம் எழுதக்கூடிய கவிதையில் தன்னுடைய படைப்பு எதுவாக இருந்தாலும் அந்தப் படைப்பை படிப்பவர்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை காட்சிப்படுத்தி கூறுவதுதான் படிமமாகும்.

சான்று:

“வெயில் மழைக்கு
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கு”

என புதுக் கவிஞரான தேவதேவன் கூறியுள்ளார்.

அதாவது ஒரு எருமைமாடானது வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் சொரணையில்லாமல் ஒரேயிடத்தில் இருக்கும்.

இதனைக் கூற வந்த கவிஞர் அதனை நீர்நிலைகளில் பெரிய பாறை பல ஆண்டுகளாக மழை பொழிந்தாலும், வெயிலில் காய்ந்தாலும் அதில் அப்படியே இருப்பது போல் எருமமாடு சொரணையில்லாமல் இருந்தது என்று ஒப்புமைப்படுத்தி அதனை ஒரு காட்சிப்பொருளாக கண்முன்னே நிறுத்துகிறார்.

படிமத்தின் வகைகள்

படிமத்தை அமைப்பதற்கு பலவகையுண்டு. உவமை உருவகத்தை போல படிமமும் நான்கின் அடிப்படையில் தோன்றும். அதாவது

  1. வினைப்பயன் படிமம்
  2. பயன் படிமம்
  3. மெய்ப் படிமம்
  4. உருவப் படிமம்

வினை படிமம் என்பது ஒரு கவிஞர் தான் படிக்கக்கூடிய தன்னுடைய கவிதையில் அல்லது தன்னுடைய படைப்பில் ஒருவர் செய்யக் கூடிய செயலை அல்லது வினையை காட்சிப்படுத்துவதாக அமைவதுதான் வினைப் படிமமாகும்.

எடுத்துக்காட்டு:

“காட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தனறுடு மாதே;
ஊர்கொன வந்த பொரு;னொடு
தெரியல் நெடுந்தகை போரே” [புறம் 82: 4-7]

பயன் படிமம் என்பது ஒரு கவிஞர் தான் எழுதக்கூடிய கவிதையில் ஒன்றினால் ஏற்படக்கூடிய பயனை காட்சிப்படுத்திக் கூறுவது பயன் படிமம் ஆகும்.

எடுத்துக்காட்டு:

“நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந்தாஅங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே!” [குறந்-202]

மெய்ப் படிமம் என்பதற்கு வடிவம் என்று பொருள். கவிஞர்தான் எழுதக்கூடிய கவிதையில் வடிவ ஒப்புமையைக் காட்சிப்படுத்தி கூறுவது மெய் படிமம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

“யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்” [அகம், 391: 11-13]

உருவப் படிமம் என்ற சொல்லுக்கு நிறம் என்பது பொருளாகும். ஒரு கவிஞர் தான் படைக்கும் கவிதையுல் நிற ஒப்புமையைக் காட்சிப்படுத்தி கூறியிருப்பது உருவப் படிமம் எனப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:

“வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப” [அக.நானூ 71:6]

Read more: அடுக்குத்தொடர் என்றால் என்ன

மதிப்பீடு என்றால் என்ன