உலகில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. முத்தமிழ் என சிறப்பிக்கும் பொருளுடையது.
இசைத் தமிழ், இயல் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் நாடகத்தமிழ் தொன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும்.
தமிழ் நாடகத் தன்மை தொல்காப்பியர் நாடக வழக்கினும் என்று நாடகத்தை குறிப்பிடுகின்றார்.
சிலப்பதிகாரம் நாடகக் கூறுகளுடன் நாடக காப்பியமாகத் திகழ்கின்றது. இதனால்தான் சிலப்பதிகாரத்தை குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம் என்றெல்லாம் அழைக்கின்றனர்.
“கூத்துக் கலைக்கு ஏற்றவாறே குரல்வழி நாடக அரங்கம்” இந்த செய்திகளையும் சிலப்பதிகாரத்தில் அறியமுடிகின்றது.
அகத்தியம், குணநூல் கூத்து நூல், மதிவாணர் நாடகத்தமிழ் போன்ற நாடக நூல்கள் பழந்தமிழ் வழக்கில் இருந்தன என்பதை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப் பாவை போன்ற கூத்துக்களை சங்ககாலத்தில் காணமுடிகின்றது. தமிழ் இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.
குறிப்பாக தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும் நாடகம் பற்றிய குறிப்புகளை மிகுதியாக காண முடிகின்றது.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
இலக்கணம் நாடக நூல்களும் ஏராளம் உள்ளன. செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் எனும் நூலில் நாடகம், அதனுடைய விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறை, நடிப்புக்கு இலக்கணம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
Table of Contents
நாடகம் என்றால் என்ன
இயலும், இசையும் கலந்து கதையை தழுவி நடித்துக் காட்டுவது நாடகமாகும். நாடகம் என்பது நாடு+அகம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாட்டை அகத்தில் கொண்டது நாடகம் ஆகும்.
நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் எனப் பெயர் பெற்றது என்கின்றனர்.
நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை ஆகும். அதாவது, கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம்.
நாடகத்திற்கு அகம் நாடு, உன்னை உணர், அகத்தை நாடு என்றெல்லாம் பலவாறு அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். எனினும் நாடகம் என்பது உலக நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தக் கூடியதாகும்.
கதையை நிகழ்ச்சியை உணர்வை நடித்துக் காட்டுவது கூத்தாகவும் ஆடிக் காட்டுவது நாடகம் எனவும் கூறுவர். இதற்கு கூத்துக்கலை என்ற பெயரும் உண்டு.
நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்
எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து மேடை நாடகங்களாக மாறி இலக்கியங்களாக மறுமலர்ச்சி பெற்றன. இது தொன்றுதொட்டு படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.
தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம் என்கின்றனர். நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறிவதற்கு முன்பே “போல செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக அமைந்ததை நம்மால் காணமுடியும்.
ஒருவர் செய்வதைப்போல தானும் செய்து பார்க்க வேண்டும் எனும் எண்ணம் மனித உணர்ச்சிதான் நாடகம் தோன்ற காரணமாக அமைந்தது.
பண்டைய மரப்பாவைக் கூத்து, பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்து, பின்னர் தோல்பாவைக் கூத்தாக, நில பாவை கூத்தாக மாறியிருக்கின்றது.
உயிரற்ற பொருட்களை வைத்து விளையாடிய விளையாட்டு படிப்படியே உயிருள்ள மனிதர்களை வேடம் புனையச் செய்து, ஆடிப்பாடி நடிக்க வைத்ததே பாவைக்கூத்து முதல் பல்வேறு நிலைகளில் நாடகம் வளர்ச்சி அடைந்ததன் விளைவே இன்று நாம் காணும் புதிய நாடாக உலகில் அடியெடுத்து வைத்து இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
Read more: கலை என்றால் என்ன