இனிப்பு தின்பண்டங்கள் பல வகை இருந்தாலும் பெரும்பாலும் இனிப்பு பண்டம் என்றதும் நம் நினைவில் வருவது ஜாங்கிரி தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இனிப்பு என்றாலே விருப்பம் தான். ருசியான ஜாங்கிரி வீட்டிலேயே எப்படி செய்வது என இப்போது இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க!
Table of Contents
தேவையான பொருட்கள்
- உளுந்து – 250கிராம்
- சோயா – 3 டேபிள்ஸ்பூன்
- கலர் – தேவையான அளவு
- சர்க்கரை – 1 கிலோகிராம்
- எண்ணெய் – தேவையான அளவு
ஜாங்கிரி செய்முறை
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் உளுந்து சேர்த்து வடைக்கு அரைத்து எடுத்துக் கொள்ளும் பதத்தில் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த உளுந்தை ஒரு தட்டில் சேர்த்து கொள்ளவும்.
பின்பு 3 டேபிள்ஸ்பூன் சோயா மாவு சேர்த்து ஒரே சைடில் மாவை கைவைத்து 10 தொடக்கம் 15 நிமிடங்கள் கலந்து கொள்ளவும். ஒரே சைடில் பிசைந்தால் தான் மா சாஃப்டாக இருக்கும்.
பின்பு கலரை கலந்து கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
பின் அடுப்பை ஒன் செய்து கம்பி பதத்தில் பாகை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். ஒன்றரை கம்பிப் பதத்தில் எடுத்தால் போதும்.
பின்பு சிறிதளவு கலர் சேர்த்து பாகை எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஜாங்கிரி குளேயாத்தில் அல்லது பேக்கரி பைப்பிங் பேக்கில் மாவை சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பை வைத்து அதில் ஜாங்கிரியை சுற்றிப் போட்டுக் கொள்ளவும்.
இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஜாங்கிரி சர்க்கரைப் பாகில் போட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு பரிமாறவும். இப்போது சுவையான ரெடி..!!!
Read more: சென்னா மசாலா செய்வது எப்படி