இன்று உலக நாடுகள் மக்கள் பெரிதும் வேண்டி நிற்பது ஜனநாயக ஆட்சியையே. “மக்களினால் மக்களுக்காக மக்ககளால் ஆளப்படும் ஆட்சி” என்பதே ஜனநாயக ஆட்சி என அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
ஜனநாயகம் இரண்டு வகையான இயல்புகளைக் கொண்டதாகும். ஒன்று நேரடி ஜனநாயகம் மற்றையது மறைமுக ஜனநாயகம் ஆகும்.
நேரடி ஜனநாயகம் என்பது மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்கு பற்றி அரசாங்கத்தினை இயக்குவதாகும்.
மறைமுக ஜனநாயகம் என்பது மக்கள் நேரடியாகவன்றி தமது பிரதிநிதிகளுடாக அரசாங்கத்தினை உருவாக்கித் தம்மைத் தாமே ஆட்சி செய்வதாகும்.
அந்த வகையில் ஜனநாயகம் என்பது நாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் பற்றி இப்பதிவில் காண்போம்.
ஜனநாயகத்தின் முக்கியத்துவம்
#1. பூரணமான சமூக வாழ்க்கையை அனுபவிப்பதற்கு ஜனநாயகம் முக்கியமானதாகும்.
மனிதன் செவ்வனே வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு நாளாந்தம் தேவையான நிபந்தனைகளே உரிமைகளாகும். சமூக நலனை பேணுவதற்கும், உரிமைகளே துணை புரிகின்றன. இத்தகைய உரிமைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க ஜனநாயகம் முக்கியத்துவமானதாகும்.
#2. சமத்துவம், சமத்துவத்திற்கான அடித்தளத்தை அளிக்க ஜனநாயகம் முக்கியத்துவமாகும்.
அரசாங்க அதிகாரங்களை பிரித்து, அவற்றுக்கிடையே சமநிலையையும் பரஸ்பர கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க ஜனநாயகம் அவசியமானதாகும்.
#3. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் சிறப்பாகச் செயல்பட ஜனநாயகம் முக்கியமானதாகும்.
அரசியல் கட்சிகளானவை மக்களின் பல்வேறு பிரிவுகளின் நலன்களையும் சித்தாந்தங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும். இந்த கட்சிகள் அனைத்து மக்களையும் பேதமின்றி சமமாக நடாத்த ஜனநாயகம் அடிப்படியாக அமைகின்றது.
#4. நீதித்துறை சுதந்திரத்தைப் பேணுவதற்கு ஜனநாயகமே முக்கியமானதாகும்.
ஒரு நாட்டில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட்டால்தான், அநீதிகள் தடுக்கப்படும், குற்றங்கள் குறைக்கப்படும். சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற கருத்து நீதித்துறை சுதந்திரத்திலேயே அடங்கியுள்ளது.
#5. சகிப்புத் தன்மை.
ஜனநாயகம் சகிப்புத் தன்மையினை முதன்மைப்படுத்துகிறது. சகிப்புத் தன்மையில்லாவிட்டால் மக்களிடையே நல்லுறவினை ஏற்படுத்த முடியாது. சகிப்புத் தன்மை பேணப்பட்டால் ஜனநாயகம் வெற்றி பெறும்.
#6. கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவதற்கு ஜனநாயகம் முக்கியமானதாகும்.
சமூகத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஒவ்வொரு பிரசைக்கும் உண்டு. கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவது சர்வாதிகார ஆட்சியினையே ஏற்படுத்தும். எனவே கருத்துச் சுதந்திரம் வேண்டுமாயின் அங்கு ஜனநாயக ஆட்சியை தேவைப்படுகின்றது.
#7. மக்கள் இறைமை.
ஜனநாயகம் என்பது இறுதியான அதிகாரத்தினை மக்களிடமே கொண்டுள்ளது. முழுச் சமூக அமைப்பிலும் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்படுவதற்கு ஜனநாயகமே முக்கியமானதாகும்.
#8. வாக்குரிமை.
வாக்குரிமை என்பது ஒவ்வொரு பிரஜையினதும் இயற்கையான பிரிக்க முடியாத உரிமையாக கருதப்படுகிறது. இத்தகைய உரிமைகளை ஜனநாயகமே அளிக்கின்றது.
மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள முடியும். தேவையற்ற, மக்களுக்கு விருப்பமில்லாத சட்டங்கள் சட்ட சபையில் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கு சர்வஜன வாக்குரிமை பயன்படுகிறது.
#9. மக்கள் நலன் அரசை உருவாக்குதல்.
மக்களின் நலன்களை பெறுகின்ற அரசை உருவாக்குவதற்கு ஜனநாயகம் முக்கியமானதாகும். ஜனநாயகம் உள்ள நாடுகளில்தான் மக்களின் நலன்கள் பேணப்படுகிறன. மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவு செய்து அவர்கள் ஊடாக தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு ஜனநாயகம் முக்கியமானதாகும்.
#10. இன, மத, மொழி ரீதியான வேறுபாட்டைத் தவிர்ப்பதற்கு ஜனநாயகம் முக்கியமானதாகும்.
ஜனநாயகம் மேலோங்கிக் காணப்படும் நாட்டில் இன, மத, மொழி ரீதியான பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் சமமாக மதிக்கபடுவதுடன் அவர்களது உரிமைகளும், நலன்களும் பாகுபாடின்றிப் பேணப்படும்.
You May Also Like : |
---|
கல்வியின் பயன்கள் |
வாசிப்பின் நன்மைகள் |